பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

லும், கோதகிரியிலும் வான ஆராய்ச்சிக் கூடங்கள் நிறுவ முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆனால் அவ்விடங்களைவிடக் கோடைக்கானலே வான ஆராய்ச்சிக்கு ஏற்ற இடம் என்று முடிவு செய்யப்பட்டது. இவ்விடத்தின் பொருத்தமான தட்ப வெப்ப நிலையும், மப்பு மந்தாரமற்ற தெளிந்த வானமும் இவ்வாராய்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிகின்றன.

19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கோடைக்கானலில் ஒரு வீழ்கொள்ளி (Meteorite) திருவாளர் லோகன் என்பாரின் தோட்டக்காரனால் தோண்டி எடுக்கப்பட்டது. நில ஆராய்ச்சித் துறையினர், இந்தியாவில் காணப்படும் இரண்டாவது இரும்பு வீழ் கொள்ளி இதுவே என்று கூறுகின்றனர். இதன் நிறை 35 ராத்தல். இது இப்போது கல்கத்தா பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ் வீழ்கொள்ளி வான ஆராய்ச்சியாளரின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்ததால், 105 ஆண்டுகளாகச் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்த சென்னை வானாய்வுக் கூடம் கோடைக்கானலுக்கு மாற்றப்பட்டது. முதன் முதலில் கிளென் வீழ்ச்சிக்கருகில் தற்காலிகமாக இக்கூடம் நிறுவப்பட்டது. மிகவும் உயர்ந்துள்ள, கோடைக்கானலுக்கு அருகில் அமைந்திருக்கும் தற்போதைய இடத்திற்குப் பிறகு இது மாற்றப்பட்டது.

தற்போதுள்ள வானாய்வுக்கூடம் திருவாளர் ஆர். எஃப், ஸ்டோனி என்ற ஒரு சிறந்த பொறியியல் வல்லுநரால் கட்டி முடிக்கப்பட்டது. சென்னைமாநில ஆளுநராக இருந்த திருவாளர் வென்லாக் என்பவர் தாம் கி. பி. 1895-ஆம் ஆண்டு இக்கட்டிடத்திற்குக் கல் நாட்டினார். குதிரைப் பாதையின் வழியாகவே குதிரையூர்ந்து அவரும் கோடைக்கானலுக்கு வந்தார். இதை நல்ல வாய்ப்பாகக் கொண்ட கோடைக்கானல் மக்கள் இக்குறிஞ்சி நகரை இருப்புப்பாதை மூல