பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

குழிப்பந்தாட்டக் கழகம் :

கி. பி. 1880-ஆம் ஆண்டில் கோடைக்கானலில் ஒரு குழிப்பந்தாட்ட மைதானம் அமைக்க முயன்றனர். ஆனால் அம்முயற்சி பலனளிக்கவில்லை. கி. பி. 1895-ஆம் ஆண்டு, குழிப்பந்தாட்டத்தில் ஆர்வமுடைய பலர் கோடைக்கானல் கழகத்தில் கூடினர். அக்கூட்டத்திற்கு ஜெ. டபிள்யூ. எஃப். டி யூமெர்கியூ என்பவர் தலைமை தாங்கினார். தூண்பாறைப் பாதையில் மைதானம் அமைக்கப்பட்டது. கி. பி. 1926 ஆம் ஆண்டு இக்கழகத்திற்காக ஒரு கட்டிடமும் கட்டப்பட்டது. கட்டிடத்திற் கெதிரில் மைதானமும் சிறப்பாக அமைக்கப்பட்டது. கி. பி. 1930-ஆம் ஆண்டு மேத் திங்கள் 7- ஆம் நாள் வீசிய புயல் இக் கழகத்தின் கூரைகளைப் பிரித்தெறிந்ததோடு கட்டிடத்திற்கும் கேடு விளைத்தது. ஆனால் புயல் வீசியது நன்மைக்கே என்று சொல்ல வேண்டும். பிறகு நன்கொடை நிறைய வசூல் செய்யப்பட்டுப் பெரியதும், அழகானதுமான மற்றொரு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இக்கழகக் கட்டிடத்தை முன்னின்று கட்டி முடித்த ஈ. ஓ. கிங் என்பவர் இக்கழக வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டார்.

இந்தியர் கழகம் :

கி. பி. 1901-ஆம் ஆண்டுக் கணக்குப்படி 1900 குடியிருப்புகள் கோடைக்கானலில் இருந்தன. அங்கு வாழ்ந்த இந்தியரில் பெரும்பாலோர் வணிகர்களாகவும், மரவேலை செய்வோர்களாகவும், கொத்தர்களாகவும், தாளாளர் {Clerks)களாகவும், வேலைக்காரர்களாகவும் இருந்தனர். நகராட்சி மன்றம் வளர்ச்சியுற்றதும், அதில் பணிபுரிவதற்காகப் படித்த இந்தியர்கள் மிகுதியாகத் தேவைப்பட்டனர், கோடைக்கானலின் அழகைப் பற்றியும், வருவாய் நல்கும் காஃபித் தோட்டங்களைப் பற்றியும் கேள்வியுற்ற இந்திய நாட்டுச் செல்வர்கள்