பக்கம்:தமிழக ஆட்சி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சட்டம்-முறை-காவல்

77


,

‘வேலன்று வென்றி தருவது மன்னவன்

கோலது உம் கோடா தெனின் ‘

என்பது தமிழ் அறம். அரசன் கொடியவரைத் தண்டித்தல், பயிரைக் காக்கக் களை நீக்குவது போன்ற செயலாகும் என்பது: வள்ளுவர் கருத்து.

‘ கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதைெடு நேர் ‘ - எனவே, தியோரைத் தண்டித்தல் அறச்செயலாகவே கருதப் பட்டது. இது முன்னரும் கூறப்பட்டது.

அறநூல்

சங்க காலத்தில் பசுவின் மடியை அறுத்தல், மகளிரது. கருவைச் சிதைத் கல், பார்ப்பாரை அவமதித்தல் முதலியன செய்தவர் பெரிய அறங்களைச் சிதைத்தவர்’ என்று கருதப். பட்டனர். ‘ஒருவன் செய்த நன்மையை மறந்தவனுக்கோ, நன்மைக்குப் பதிலாகத் தீமை செய்தவனுக்கோ உய்வில்லை. என்று அறம் பாடிற்றே ஆயிழை கணவ, என்று புலவர் ஆலந்துார் கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி’ வளவனிடம் கூறினர். இங்கு, அறம் என்பது நீதிநூல். அல்லது அறநூல்.

“ எங்கன்றி கொன்றாற்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்க்கன்றி கொன்ற மகற்கு” என்பது திருக்குறள். ஆலந்துார்கிழார் குறிப்பிட்ட அறம் இதுவே. எனவே, அப்புலவர் காலத்தில் திருக்குறள் அற. நூலாகக் கருதப்பட்டது போலும் !

அக்காலத்தில் போர் தொடங்க விரும்பிய அரசர் முதற்கண், “யாம் நும் நாட்டின்மீது படையெடுப்போம்.

1. புறநானூறு, செ. 34 2. டிெ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/84&oldid=573602" இலிருந்து மீள்விக்கப்பட்டது