பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74


"ஐயப்பா! அதுவுன் னய்ந்த அகத்தெழு மார்வ மாயின், மெய்யப்பன் மெலியத் துன்பம் மேவாது, மெல்லச் சேர்க்கும் பையப்பன் பாரம் கம்மி பண்ணுது, பாங்கு பார்த்துச் செய்யப்பா! "வேண்டா" மென்று செப்பேன்நா" னென்ரு னப்பன். அப்பனின் அசட்டுச் சொல்கேட் டருகினி லிருந்த ஆண்பெண் குப்புறக் குலுங்கிக் கூவிக் 'கொல்' லெனச் சிரிக்க லுற்ருர்! "ஒப்பில்லை இந்தச் சொல்லுக் குலகத்தில்; உறவென் றுள்ளோர் தப்பித்துக் கொள்வ தன்ருே தருமமிக் காலத் தென்றே. சிரித்தஅவ் வோசை சென்று சிறுகத்தேய்ந் தடங்கும் முன்பே, தரித்திரம் தனக்குற் றென்னத் தம்பியைத் தலைமேல் தாங்கி, வருத்தமும் வாஞ்சை யும்தன் வதனத்தில் வடிய வந்து, திருத்தமாய்ப் பகர்ந்தாள், பாராள் தெளிவான குரலில் தேம்பி! "காராளர் மரபுக் கேற்பக் கதிர்விட வளரும் கையின் தாராளம் முழுது மின்றென் தம்பிக்குக் காட்டி விட்டார்! ஏராள மாய்த்தான் போச்சு! என்னவோ,- கதைசொல் வார்கள்: 'நீராழ மென்ருல், நெய்தல் நீர்க்குமேல் நீள' மென்றே.