பக்கம்:தமிழன் இதயம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழன் இதயம்

" கத்தியின்றி ரத்தமின்றி " இந்தப் பிரசித்தி பெற்ற பாட்டுத்தான் நாமக்கல் கவிஞரைத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்திவைத் தது. இதனுடன் இணைந்திருக்கும் சரித்திரம் எல் லோருக்கும் நன்கு தெரிந்த விஷயமாகும். (கத்) (கத்) (கத்) கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது. சத்தியத்தின் நித்தியத்தை நம்பும்யாரும் சேருவீர் ஒண்டி அண்டிக் குண்டுவிட்டு உயிர்பறித்த லின்றியே மண்டலத்தில் கண்டிலாத சண்டை யொன்று புதுமையே குதிரையில்லை யானையில்லை கொல்லும் ஆசையில்லையே எதிரியென்று யாருமில்லை எற்றும் ஆசையில்லதாய் கோபமில்லை தாபமில்லை சாபங்கூறல் இல்லையே பாபமான செய்கை யொன்றும் பண்ணுமாசை யின்றியே கண்டதில்லை கேட்டதில்லை சண்டையிந்த மாதிரி பண்டைசெய்த புண்ணியம் பலித்ததே நாம்பார்த்திட காந்தியென்ற சாந்தமூர்த்தி தேர்ந்துகாட்டும் செந்நெறி மாந்தருக்குள் தீமைகுன்ற வாய்ந்ததெய்வ மார்க்கமே (கத்) (கத்) (கத்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/6&oldid=1448498" இலிருந்து மீள்விக்கப்பட்டது