பக்கம்:தமிழர் மதம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைநிலை யியல் என்பன இறைவனை யடையும் நாற் படிகளாகக் கொள்ளப்பட் டன. கல்வியைப் பிராமணன் குலத் தொழிலாகக் கொண்டதி னாலும், விருந் தோம்பலும் வேளாண்மையும் இகையும் ஒப்புர வொழுகலும் பிராமணனுக்கின்மை யாலும்,ஓதியே வீடு பேற்றிற் குச் சிறந்த வாயிலெனக் கூறினர். கண்ணப்ப நாயனார், இளை யான்குடி. மாற நாயனார் முதலிய சிறந்த அடியார்கள், வழிபாட் டாலும் தொண்டாலுமே வீடு பேறெய்தினர். உண்மையான வீடுபேற்று வாயில்கள் அறிவு அன்பு என்னும் இரண்டே. அறி வென்பது, இறைவனையும் அவனை யடையும் வழியையும் பற்றி அறிந்து கொள்வது. அவ்வழி, இல்லறம் துறவறம் என்னும் இரண்டுமாம். அன்பென்பது தொண்டும் இகமும் (தியாகமும்). "அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். (குறள்.எக). '"அன்பிலா ரெல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.3> 992 "அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. (Gop 012). (திருமந்.உருஎ). அன்பெல்லாம் முட்டுண்ட விடத்து இகத்தில் தான் முடியும். "நத்தம்போற் கேடும் உளதாகுஞ் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது. (குறள்: உஙரு). அன்பு வடிவான சிவத்தை அன்பினால் தான் அடைய மூடி யும். மக்களிடம் அன்பில்லாதவன் இறைவனிடம் அன்பு செய்ய முடியாது. இனி, வீடு அல்லது பேரின்பம் ஒருவகைப் பட்ட தாகவே யிருக்க, அதை நால் வகை வாயிலின் பயனாக உடனுலகம் (சாலோகம்), உடனண்மம் (சாமீபம்), உடனுருவம் (சாருபம்), உடனொன்றம் (சாயுச்சியம் ) என நால் வகைப் படுத்துவது, உத்திக்கும் தமிழ மரபிற்கும் ஒத்த தன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/105&oldid=1428984" இலிருந்து மீள்விக்கப்பட்டது