பக்கம்:தமிழர் மதம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழர் மதம் டொகைகளைப் பெருக்குவதும் புதுச் சொற்களைப் புணர்ப்பதும் ஆரியர் வழக்க மாகும். திருவாசகத் திருவெம்பாவைப் பழைய உரை முகத்தில், தொள் ளாற்றல்களின் (நவ சக்திகளின்) பெயர் அம்பிகை, கணாம்பிகை, கௌரி, கங்கை, உமை, பரா சத்தி, ஆதி சத்தி, ஞான சத்தி, கிரியா சத்தி என்றும்; உரை யுள், மனோன் மணி, சர்வ பூத தமனி, பெலப் பிர தமனி, பெலவிகரணி, காளி, இரவுத்திரி, சேட்டை, வாமை, சிவ சத்தி என்றும்; கூறப்பட் வெறுஞ் சொல் லாரவாரத்தால் தமிழரை மயக்கி அடக்கி யான் வதற்கே , புனையப் பட்டன என அறிக. சொல்லுலகம் (சத்தப் பிரபஞ்சம்) மெய்ப் பொருளியலில், மொழித் துறையில் தான், ஆரியர் ஏமாற்றும் தமிழர் ஏமாறலும் இருசாரார் அறியாமையும் விளங் கித் தோன்றுகின்றன. சொல்லுலகம், பொருளுலகம் (அர்த்தப் பிரபஞ்சம்) என உலகம் இரு வகைப்படும் என்றும்; அவற்றுட் சொல்லுலகம் வண்ண ம் அல்லது வரணம் (வர்ண), கிளவி (பதம்), மந்திரம் (மந்தர) என முத் திறப்படும் என்றும்; வரணம் ஐம்பத்தொன் தும், பதம் எண்பத்தொன்றும், மந்திரம் பதினொன்றும், ஆகு மென்றும்; அறிவுக் கரணியமா யிருப்பதால், சொல்லுலகம் தூய (சுத்த) மாயையின் கருமியம் (காரியம்) என்றும்; அது உந்தியி லிருந்து எழுப்பப்படும் உதானன் என்னும் காற்றினால் வினவ தென்றும்; வாய்ச் சொல் (வாக்கு) நுண்ணிய (சூக்குமை), கரு நிலை (பைசந்தி), இடைநிலை (மத்திமை), உ ரு நிலை (வைகரி) என நானிலை தென்றும்; அந் நால்வகை வாய்ச் சொல்லாலேயே வேறு படுத்துணர்வு (சவிகற்ப ஞானம்) உண் டாகும் என்றும், அவையின்றேற் பொதுப்படுத் துணர்வே (நிர் விகற்ப ஞானமே) உண்டாகும் என்றும்; ஆரியர் தம் கருத்துக் களைச் சிவனிய மெய்ப் பொருளியலிற் புகுத்தி விட்டனர். ஆரிய மந்திரம் எழுகோடி யென்னுங் கூற்று முள்ளது. சொல் லுலகம் என்று கண் கூடும் நிலையும் ஆன ஒரு தனியுலகம் இல் லவே யில்லை . வெளி யிடத்திற் பொருள்கள் மோதுவதனாற் செவிப் புலனான ஒலியும் ஓசையும் தோன்றி, உடனே நீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/120&oldid=1429700" இலிருந்து மீள்விக்கப்பட்டது