பக்கம்:தமிழர் மதம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இடை நிலை யியல் ககா, திருநாள் பெருநாட்களிலும் வெற்றி விழாக்களிலும் வெளியூர் செல்லும் போதும், மூவேந்தரும் பிராமணர்க்குத் து இல திறை (துலாபாரம்), பொன்னா (இரணிய கருப்பம்), ஆவாயிரம் (கோசகஸ்ரம்) முதலிய தானங்களைச் செய்து வந்தனர். வீடும் நில மு மில்லாத ஏழைப் பிராமணர்க் கெல்லாம், கோவில்களில் ஊட்டுப் புரைகள் அமைக்கப் பட்டன. பெருங் கோவில்களில், ஆயிரக்கணக்கான பிராமணப் பூச கர் எளிய பணி செய்து இன்பமாக வாழ்ந்து வந்தனர். தில்லை யில் மட்டும் மூவாயிரம் பேர் இருந்தனர். அதற்குக் கேட்பார் கேள்வி யில்லை. இலவசக் கல்வி முக்கூடல், எண்ணாயிரம், திருவொற்றியூர் முதலிய பல இடங்களில், பிராமண மாணவர்க்கு மட்டும், ஊண், உடை, உறையுள் , எண்ணெய் முழுக்கு, நோய் மருத்துவம், பொத் தகம், கல்வி ஆகிய அனைத்தும் இலவசமாக நடைபெற்றது. கொலைத் தண்டனை யின்மை பிராமணனுக்குக் கொலைத் தண்டனையாவது, அவன் தலையை மொட்டை யடித்து அவன் பொருள்களுடன் அவனை வேற்றூர்க்கு அனுப்பி விடுவதே, என்று மனுதரும சாத்திரம் கூறுகின்றது. அரசனுட்பட, யாரேனும் ஒருவன் ஒரு பிராமண னைக் கொன்று விடின், அப் பிராமணனது ஆவி கொன்றவனைத் தொடர்ந்து பழிவாங்கி விடும் என்று, பிராமணர் ஒரு கருத்தைப் பரப்பி விட்டனர். அதனால், கேரள நாடுகளில், பிராமணக் குற்றவாளிக்குக் கொலைத் தண்டனை விலக்கப் பட்டிருந்தது. மூன்றாங் குலோத்துங்கச் சோழன் ஒரு கொலைக் குற்றவாளி யான பிராமணனுக்குக் கொலைத் தண்டனை யிட்டான், அதனாற் பிராமணரிடையே ஒரு பட படப்பு ஏற்பட்ட தாகத் தெரிகின்றது. அது பற்றிய கதை வருமாறு: குலோத்துங்கச் சோழன் ஒரு பிராமணனுக்குக் கொலைத் தண்டனை யிட்டான். அதனால் அப் பிராமணன் ஆவி அரசனை அல்லும் பகலும் தொடர்ந்தது. அரசன் அதினின்று தப்புவதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/129&oldid=1429709" இலிருந்து மீள்விக்கப்பட்டது