பக்கம்:தமிழர் மதம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இடை நிலை யியல் ககரு உண்டி படைத்து வந்தார். ஓராண்டு பன்னாள் விடாப் பெரு மழை பொழிந்து எங்கும் வெள்ளமாகி விட்ட தனால், பிராமண ருக்கு உண்டி சமைக்க விறகு கிடைக்கவில்லை. அதனுால் , அரண்மனையின் ஒரு பகுதியை இடித்து, அதிலுள்ள உத்தரம், துலாக் கட்டை , கைமரம், சட்டம், கம்பம், நிலை, கதவு, பலகணி முதலிய எல்லா மர வுறுப்புக்களையும் வெட்டி யெரிக்க நாயக்கர் உத்தரவிட்டார். அவை தீர்ந்த பின், பிராமண ரூண் தடையுண்ணுவாறு, அரண்மனையி லுள்ள விலை யுயர்ந்த பட் டாடைக ளெல்லாம் எண்ணெயில் துவைத்து எரிக்கப் பட்டன, இந் நிலையில், திருவரங்க நாய்ச்சியாரின் விலை மதிக்க முடி யாத வயிர மூக்குத்தி களவு போய் விட்டது. அங்குள்ள இட வகன் (ஸ்தானீகன்) ஆன பிராமணப் பூசகன் திருடினா னென்று அக் கோவி லதிகாரிகள் அவனை நையப் புடைத்தனர். அவன் அடி தாங்காது நாயக்கரிடம் வந்து முறையிட்டான். உடனே ஒரு பிராமணப் பெண், அரங்க நாயகி தன் மீதேறி யதாக நடித்து அணங்காடி, "பிராமண வுண்டி சமைக்க அரண் மனைப் பட்டாடைகளை எண்ணெய் தோய்த் தெரித்த போ தெழுந்த புகையைப் பொறுக்க முடியாது, மடைப்பள்ளியா ரெல்லாம் ஓடிப் போய் விட்டனர். அரங்க நாயகியே ஒரு பிரா மண மடை மகளாக வந்து சமைத்தாள், அவளும் புகையால் முகத்திலும் மூக்கிலும் தாக்குண்டு, அங்கிருந்த கழு நீர்த் தொட்டியில் மூக்குச் சிந்திய போது, அவள் மூக்குத்தி அத் தொட்டிக்குள் விழுந்து இன்னும் அங்கேயே விடக்கின்றது. அதற்காகக் கோவிற் பூசகனை அடிப்பது அறங்கடை என்று விளம்ப, நாயக்கரும் அங்கனமே மூக்குத்தியைக் கண்டெடுத்து, அரங்க நாயகியே தன் அரண்மனைக்கு வந்தருளினா ளென்று அள வற்ற மகிழ்ச்சி கொண்டாடி, அம் மூக்குத்தி போல் எண் மூக்குத்தியும் நாய்ச்சியார் பொற் படிமை யொன்றும் செய் வித்து, மேள தாளங்களுடன் திருவரங்கத்திற்கு அட்டோலக்க மாய் அனுப்பி வைத்தார். ஆங்கூர்க் கோவிற் பூசகன், பூசை வேளையில் திருவமுது படைக்காது வெறுங் கொட்டு முழக்கம் மட்டும் செய்வித்து வந்தது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/131&oldid=1429662" இலிருந்து மீள்விக்கப்பட்டது