பக்கம்:தமிழர் மதம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ககள இடை நிலை யியல் (ரு) தமிழ மத உட்போர் | கிறித்தவமும் இசலாமும் போலச் சிவனியமும் மாலியமும் வேறுபட்ட மதங்களாம். ஆயினும், இரண்டும் இறைவனையே வெவ்வேறு பெயரால் வணங்குவனவாம். ஆதலால், சிவனைப் போன்றே திருமாலும் முத் தொழில் செய்பவன் என்று கூறப் படும். சமயகோடிக ளெலாம், தத்தெய்வம் எந்தெய்வமென் றெங்குத் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது” என்று தாயுமானவரும், "முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன் என்று திருமூல நாயனாரும், "தோள் கண்டார் தோனே கண்டார் தொடுகழற் கமலமன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கைகண் டாருமஃதே வாள் கொண்ட கண்ணார்யாரே வடிவினை முடியக்கண்டார் ஊழ்கொண்ட சமயத் தன்னான் உருவுகண் டாரையொத்தார்.” என்று கம்பரும், பாடியிருப்பதை நோக்குக. சிறுதெய்வ வணக்கத்திலேயே நீண்ட காலமாக அடிப்பட் டுக் கடவுளைப் பற்றிக் கருத்தில்லாத ஆரியர், சிவனும் திரு மாலும் வேறென்று கொண்டு அவரை முத்திருமேனிக் கூண்டிற் குட் புகுத்தி, ஒவ்வொரு தொழிலே வகுத்ததனால், சிவனியரும் மாலியருமான தமிழரும் மயங்கி, முத்தொழி லிறைமை யில்லாத சிவ மாலருள் எவன் பெரியவன் என்று வினா வெழுந்து, அதனால் தமிழர்க்குள்ளேயே கடும் போர் மூண்டது. சிறந்த சிவனடியா னான இரண்டாங் குலோத்துங்கச் சோழன் (கக அ--க்கரும்) இப் போரில் இடுபட்டு, சிவனிலும் பெரிய தெய்வ மில்லை.”” என்னும் வாசகம் பொறித்த செப்புப் பட்டயத்திற் கையெழுத் திடுமாறு, திரு இராமானுச அடிகளை அழைத்தான். அடிகட்குத் தலைமாமுகக் கூரத்தாழ்வான் என் னும் மாணவகரே (சீடரே) சென்று, "சிவத்திலும் பெரியது துரோணம்.” என்று கூறியதனால், உடனே தம் இரு கண்ணை யும் இழந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/133&oldid=1429664" இலிருந்து மீள்விக்கப்பட்டது