பக்கம்:தமிழர் மதம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிகழ் நிலை யியல் கட்டு யும் தொழுகை மறையும் பற்றிப் பாடங் கேட்டவர் தனித் தமிழ்ப் பெயர் தாங்கிய தமிழராகவே யிருந்திருத்தல் வேண்டும். இன்றுள்ள வடமொழிச் சிவாகமங்கள் கி. பி. ரு-ஆம் நூற் நண்டிற்குப் பின்னரே தோன்றின. அவற்றுள் மூலமானவை தொண்டு (ஒன்பது) என்பதும், ஏனைப் பதின் றொண்டும் (பத் தொன்பதும்) அவற்றின் வழிப் பின்னர்த் தோன்றின என்பதும், பெற்ற நல் ஆகமம் காரணம் காமிகம் உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம் மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரம் துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே.) (எ.) ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு மோகமில் நாலேழு முப்பேத முற்றுடன் வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மையொன் நாக முடிந்த அருஞ்சுத்த சைவமே.” என் னுந் திருமந்திரங்களான் அறியப்படும். முப்பேதம்-மூ வேறுபாடு. அவை கருமக் காண்டம், வழி பாட்டுக் காண்டம், அறிவக் காண்டம் என்பன. சிவனியம் ஆரியர் இந்தியாவிற்குட் புகுமுன்னரே குமரி நாட்டில் தோன்றிய மதமா தலால், குமரிமலைத் தொடரின் வடமுடி யொன் றாகிய மகேந்திர மலையில், இறைவ னருள் பெற்ற குரவனிடம், தொல்காப்பியர் காலமாகிய கி. மு. ஏழாம் நூற் நண்டிற்கு முன் பாடங் கேட்டவர் தமிழராகவே யிருந்தது மட்டு மன்றி, அவர் பாடங் கேட்டதும் அதை நூலாக வரைந்ததும் தனித் தமிழ் வாயிலாகவே நிகழ்ந்திருத்தல் வேண்டும். அந் நூல் அல்லது நூல்களே, பிற்காலத்து வடமொழி யாகமங்கட்கு மூலமா யிருந்திருத்தல் வேண்டும். அம் மூல நூல்கள் யாவும் ஆரியரால் அழிக்கப்பட்டு விட்டன. பிராமணரே ஓதவும் ஓதுவிக்கவும், இரு வகைச் சடங்கும் கோவில் வழிபாடும் நடத்தவும், இவ்வகையில் தமிழரை என் றும் அடிமைப் படுத்தவும், வேண்டுமென்னுங் குறிக்கோளுட னேயே, வடமொழி யாகமங்கள் தோற்றுவிக்கப் பட்டன .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/141&oldid=1429641" இலிருந்து மீள்விக்கப்பட்டது