பக்கம்:தமிழர் மதம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிகழ் நிலை யியல் ககூடு மேலும், முதலியார் என்பது படை முதலியார்(சேனை முதலி யார்) என்னும் படைத் தலைவர் பதவிப் பெயரின் குறுக்க மாதலால், அதை அரிய நாயக முதலியார் என்னும் விசயநக ரப் படைத் தலைவர் போன்றாரின் வழியினரே மதிப்பு றவுப் பட்டமாகப் (Courtesy title) பூணுவது, மேலே முறைப்ப டி பொருந்தாதிருக்க, பொது வகையான படைஞரின் வழியின ரெல்லாம் அப் பட்டத்தை வழிவழி பூணுவது எங்கன் பொருந் தும்? இன்றும், திருப்பனந்தாள் மடத்தில், பிராமணப் பையன் கண்யே சமற்கிருத வகுப்பிற்குச் சேர்ப்பதும், பிராமண மாண வர்க்கும் தமிழ் மாணவர்க்கும் வெவ் வேறிடத்தில் உண்டி படைப் பதும், முகம், மீனம் முதலிய தூய தென் சொற்களை வட சொல் லென்று கற்பிப்பதும், வழக்கமா யிருப்பதாகத் தெரிகின்றது. மும் மடங்களும் ஆரியச் சார்பாயிருந்து குல வேற்றுமை காட்டுவதற்கு, பின் வருபவை கரணியமா யிருக்கலாம். (க) வெள்ளாண் குலத்தினரே மடத் தலைவராக இருத்தல் வேண்டு மென்னுங் கொள்கை. சமற்கிருதம் தேவ மொழியும், வேதம் சிவமத மூலமும், ஆகுமென்னுங் குருட்டு நம்பிக்கை. (n) ஆரியத்தைப் போற்றாவிடின், பிராமண வழக்கறிஞர் சிவ மடங்களை அறநிலையப் பாதுகாப்பு மன்ற ஆட்சிக் குட் படுத்தி விடுவர் என்னும் அச்சம். (ச) சூத்திரனுக்குத் துறவில்லை யென்னும் ஆரியக் கொள்கை பற்றிய தாழ்வுணர்ச்சி. (C) சிவத் தொன்மங்களும் (புராணங்களும்) திருமந்திரமும் சிவ ஞான போதமும் முதலிய கொண் முடிபு நூல்களும், சிறப்பாக, ஓங்காரப் பகுப்பும் சிவாய நம என்னும் திரு வைத் தெழுத்தும் மெய்ப் பொருள் முப்பத் தாறென்னும் முடியும் ஆகியவை, ஆரியச் சார்பா யிருத்தல். இவற்றை நீக்குவதற்கு, ஒவ்வொரு மடத்திலும், தனித் "தமிழ் ஆசிரியர் ஒருவரையும் உண்மை வரலாற்றாசிரியர் ஒருவ ரையும் அமர்த்தி, உருவிலா வழிபாட்டை மேற்கொன்னல் வேண்டும். உருவ வழிபாடு துறவு நிலக் கேற்பதன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/151&oldid=1429651" இலிருந்து மீள்விக்கப்பட்டது