பக்கம்:தமிழர் மதம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழர் மதம் ஆரியத் தெய்வத்தை, தமிழர் தொடக்கத் தொட்டு ஒப் புக் கொள்ள வில்லை. அவன் சிவனையே ஏமாற்றின படு மோசப் பொய்யன் என்றும், ஓங்காரப் பொருள் தெரியாது முருகனாற் குட்டுப் பட்டவன் என்றும், கதைகள் தோன்றி யுள்ள ன . (ச) சிவன் என்றும் திருமால் என்றும் இரு வேறு பெயராற் குறிக்கப்படும் ஒரே இறைவன், காப்புத் தெய்வ மென்றும் அழிப்புத் தெய்வ மென்றும் இரு வேறு தெய்வங்களாகக் காட்டப் பட்டுள்ளான், (ரு) முத் தொழில் இறைவனான சிவன் அல்லது திருமால், ஒரே தொழில் தலைவனாகக் குறிக்கப் பட்டுள்ளான், (சு) ஒரே இறைவனை இரு வேறு தெய்வமாகக் காட்டிய தால், சிவன் பெரியவனா, திருமால் பெரியவனா என்னும் மதப் போர் மூண்டுள்ளது. (எ) பொய்யும் புரட்டுமான பல கதைகளும் கொள்கைகளும் கூற்றுக்களும், ஆரியத் தொன்மங்களிலும் கொண் முடி பியலிலும் மெய்ப் பொருளியலிலும் கூறப் பட்டுள்ளன. (அ) ஆரியன் நிலத் தேவன் என்று உயர்த்தப் பட்டும், தமிழன் சூத்திரன்' என்று தாழ்த்தப் பட்டும், உள்ளனர். (கூ) இந்து மதத்தால் தமிழப் பண்பாடு அழிக்கப் படுகின்றது. (க0 ) இந்து மதத்தால் தமிழ் வழிபாடு எதிர்க்கப் படுகின்றது. - ஆதலால், இனிமேல், சிவ நெறியான் தன்னைச் சிவனியன் என்றும், திருமால் நெறியான் தன்னை மாலியன் என்று மே, குறித்தல் வேண்டும். இரு தெறிக்கும் பொதுமை குறிக்க விரும் பின், தென் மதத்தான் அல்லது தமிழ் மதத்தான் என்று குறித் தல் வேண்டும். இந்து உயர் நிலைப் பள்ளி யென்றும், இந்துக் கல்லூரி யென் றும், தமிழ் நாடெங்கும் இருக்கும் கல்வி திலையப் பெயர்களைத் தென்னவர் உயர் நிலைப் பள்ளி, தென்னவர் கல்லூரி யென்று மாற்றல் வேண்டும். மூத்த தலை முறையைச் சேர்ந்த பெரியோர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/160&oldid=1429661" இலிருந்து மீள்விக்கப்பட்டது