பக்கம்:தமிழர் மதம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முடிபுரை யியல் கருஎ மந்திரம் முதன் முதலாகத் தோன்றியது தமிழிலேபே. "மந்திரப் பொருள்வயின் ஆஅகுநவும் (தொல். எச்ச. நிக). மந்திரம் என்னும் சொல் வரலாற்றைப் பக்கம் எை-இல் காண்க. முற்றத் துறந்த முழு முனிவர் தம் தூய வுள்ளத்தின் எண்ண வலிமையால் ஆய்ந்து கூறும் மெய்ம் மொழி, நிறை மொழி மாந் தரின் நிறைவேறுங் கூற்று. மந்திரம் வாய்மை பற்றியும் வாய்ப்பது பற்றியும் வாய்மொழி யெனவும் படும். சிவனியச் சார்பான திருமந்திர மூம் மாலியச் சார்பான திருவாய் மொழியும் தமிழில் உள்ளன. தத்துவ மசி ஓகநிலைக்குரிய தத்துவ மசி' என்னும் சொற்றொடரை, பெருங் கூற்றியம் (மகா வாக்கியம்) என்று வடமொழியாளர் பறையறைவர். அது முற்றும் தென் சொற்றிரி பென்பதை அவர் அறியார். தத் + த்வம்+ அஸி = தத்த்வ மஸி. தான், தாம் என்னும் பெயர்கள், முதற் காலத்தில் ஒருமை யும் பன்மையுங் குறித்த படர்க்கைச் சுட்டுப் பெயர்களாக விருந்து, அகர வடி கொண்ட ஐம் பாற் படர்க்கைச் சுட்டுப் பெயர்கள் தோன்றிய பிற்காலத்தில், தற்சுட்டுப் பெயர்களாக (Reflexive Pronouns) மாறின. தான் (அவன், அவள், அது.)-ச. தத் - அவன், அவள், அது. ஒ. நோ: திருமகன் - திருமான்--ச. ஸ்ரீமத். OE. thaet, E. that.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/173&oldid=1429435" இலிருந்து மீள்விக்கப்பட்டது