பக்கம்:தமிழர் மதம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் சுத்த மாயை -தூமாயை, தூய மாயை, அசுத்த மாயை - தூவில் மாயை, தூய்தல் மாயை. பிரேரக காண்டம் - இயக்கக் காண்டம். போஜயித்திரு போக்கிய காண்டம்- கஅஉ காண்டம் - நுகர்வுறுத்தக் காண்டம். நுகர்வுக் காண்டம். மிச்சிரம்--கலப்பு. வைந்தவம் - விழியியம். மாயேயம் - மாயையம். பிரா கிருதம் - மூலியம், முதனிலையம். நாதாந்தம் - ஓதை முடிபு, ஓதைக் கடப்பு. நாதம் என்னும் வடசொல்லும், சங்க நாதம் சிங்க(கொம்பு) நாதம் என்று ஓசைப் பொருளில் வழங்குதல் காண்க. பிரணவம்-இமிழி, இமிழொவி, ஓங்காரம். சமஷ்டிப் பிரணவம் - தொகுநிலை யிமிழி. வியஷ்டிப் பிரணவம்-வகுநிலை யிமிழி. ஞானம் - அறிவு. ஞேயம்-அறி பொருள். ஞாதுரு -அறி வோன், அறிநன். ஞானி-அறிவன். வியக்தம் - வெளிப்பட்டது. அவ்வியக்தம்- வெளிப்படாதது. சூனியம்-சுன்னையம், இன்மம், வெறும் பாழ். ஆதாரம் - நிலைக்களம், பற்றுக் கோடு. ஆதேயம் - நிலைக் களவன், பற்றுக் கோடன். வியாபி--வியலி. வியாபகம் வியலம். வியாப்பியம்- வியலியம். அதிட்டித்தல் - நிலைக்களங் கொள்ளுதல். சேட்டி - தொழிற்படு. சேட்டிப்பி - தொழிற் படுத்து. பாவகம் - கோடிப்பு. வைராக்கியம் - பற்றின்மை. அவைராக்கியம்-பற்றுடைமை. தீத்தல் = எரித்தல், கருக்குதல். தீ-ஒளி, விளக்கு. தீக்கை = அறியாமையை அல்லது மாசைப் போக்கி அறிவு கொளுத்துதல். தி'ரு நீறு மாசெரிந்து சாம்பலான நிலையைக் குறிப்பதே. தீக்கை-தீக்ஷா(வ.).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/198&oldid=1429357" இலிருந்து மீள்விக்கப்பட்டது