பக்கம்:தமிழர் மதம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முடிபுரை யியல் கஅரு தன்னை எல்லார்க்கும் மேலாக வுயர்த்தியும், தமிழர்க்கு ஒற்றுமை யும் உரமும் ஒருமித்த முன்னேற்றமும் ஏற்படாவாறு, அவரை நூற்றுக் கணக்கான ஏற்றத் தாழ்வுள்ள பிறவிக் குலக் கூண்டு களுள் அடைத்தும், வைத்திருக்கின் றான் பிராமணன். ஆகவே, தமிழரை முன்னேற்று தற்கு, பிராமணியத்தை மதத்தினின்று முற்றிலும் பிரிப்பதே அறிஞர் மேற் கொள்ளத் தக்க செய்தியாம். மதத் துறையி லுள்ள குற்றங் குறைகள் நீக்காது மதத்தையே ஒழிக்க வேண்டு மென்பது, சோற்றிலுள்ள கற்கணப் பொறுக்காது சோற்றையே கொட்டி விடுவது போன்றதே. சோறு முழுவதை யும் கல்லென்சே மணலென்றோ ஒருவன் கருதுவா னாயின், அது அவன் புறக் கண்ணின் அல்லது அகக் கண்ணின் கோளாறே யாகும். மதத்திற் குற்றங் களைவது எளிதன்று; எல்லார்க்கும் இயல் வது மன்று. பரந்த கல்வியும் ஆழ்ந்த ஆராய்ச்சியும் பண்பாடும் பொறுமையும் உள்ளவரே, மதத்தைச் சீர்திருத்த முடியும். மூவாயிரம் ஆண்டாக இண்டி யுள்ள அழுக்குக் குன்றை ஒரே தலை முறையில் அகற்றி விட முடியாது. இன்றும் தமிழருட் பெரும் பாலார் கடவுள் நம்பிக்கையுள்ளவ ராதலால், கடவு ளில்லை யென்று சொல்லச் சொல்ல,அது ஆரிய மேம்பாட்டிற்கும் ஏமாற்றிற்கும் அரண் செய்ததே யாகின்றது. மாந்தன் மனத்தை இறுகப் பிணிக்கக் கூடிய பற்றுக்களுள், மிகுந்த வலிமை யுடையது மதப் பற்று அல்லது கடவுட் பற்றே. தமிழன் அரும்பாடு பட்டுக் கண்ட மதத்தை ஆசியனது எனின், ஆரியனுக்கு உயர்வும் தமிழனுக்குத் தாழ்வும் ஏற்படுவதோடு, உறைத்த மதப் பற்றுள்ள தமிழனுக் கிருக்கும் ஆரிய அடிமைத் தனம் இடும்புத் தனமாக இறுகவே செய்கின்றது. அதனால் ஆரி யன் சுரண்டலும் அதிகரிக்கின்றது. இது கண்ணுரக் காணும் செய்தி. மாந்தன் புற நாகரித்திலும் சிறந்தது அக நாகரிகம். அதன் விளைவே பல் வேறு பண்பாட்டறிவியல்கள். அவற்றுள் தலைமை யானது மதவியல் அல்லது மெய்ப் பொருளியல் என்றே, மேலேய ராலும் கருதப் பெறுகின்றது. " அன் பிலா ரெல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு . "" (எக) என்பது திருக்குறள் மறை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/201&oldid=1429360" இலிருந்து மீள்விக்கப்பட்டது