பக்கம்:தமிழர் மதம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முடிபுரை யியல் கஅள " அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம் அவாவுண்டேல் உண்டாம் சிறிது.” (குறள், கஎைடு ) என்பது உண்மையா தலால், ஓரளவு நல்லொழுக்கத்திற்குத் தூண்டுகோலாக இருக்கும் வகையிலேனும், மதத்தால் நன்மை யுண்டென்று கருதி, மதத்தின் பெயரால் உண்மையில் தீங்கு செய்யும் பிறவிக் குலப் பிரிவினையையே, அறவே ஒழித்தல் வேண்டும். 1 அ. கடவுள் உண்டா ? கடவுள் உண்டென் பாரும் இல்லை யென்பாரும், தொன்று தொட்டு உலகில் இருந்து வருகின்றனர். உண்டென்பாரே இன்றும் பெரும் பால ரேனும் , இல்லை யென்பார் தொகை வர வர வளர்ந்து வருகின்றது. கடவுள் உண்டென்பதற்குச் சான்றுகள் (க) கதிரவக் குடும்பத்தைச் சேர்ந்த கோள்கள் எல்லாம், இடையறாது ஓர் ஒழுங்காக இயங்கி வருகின்றன. ஓர் ஊரில் ஊர்காவலோ அரசியலாட்சியோ சிறிது நேரம் இல்லா விடினும், கலகமூங் கொள்ளையும் கொலையும் நேர்கின்றன. உயிரற்ற தாளும் கோளும் பாவை யாட்டுப் போல் ஒழுங்காக ஆடி வரின் , அவற்றை ஆட்டும் ஓர் ஆற்றல் இருத்தல் வேண்டும். அவ் வாற்றல் அறி வற்றதா யிருக்க முடியாது. அவ் வறிவே இறைவன். (உ) இவ் வுலகம் முழுவதற்கும், கதிரவன் பகல் விளக்காக வும் திங்கள் இரா விளக் காகவும் எண்ணிற்கும் எட்டாத காலத்தி லிருந்து விளங்கி வருகின்றன. ஒரு வீட்டில் விளக் கேற்றி வைப்பது அதிற் குடியிருக் கும் மக்கட்கே. மக்க ளில்லா வீட்டில் விளக்குத் தானாகத் தோன்றி எரியாது. பல வுலகங் கட்கும் இரு சுட்ரையும் விளக்காக ஏற்படுத்தியவன் ஒருவன் இருத்தல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/203&oldid=1429362" இலிருந்து மீள்விக்கப்பட்டது