பக்கம்:தமிழர் மதம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிநிலை யியல் திவ் என்னும் மூலத்தினின்று, தெய்வம் தேவு தேவன் முதலிய தென்சொற்கள் பிறந்துள்ளதாகக் கூறுவர். தேய் என்னும் மூலத்திலுள்ள யகரமெய், தெய்வம் என்னுஞ் சொல்லிலு மிருப்ப தையும், இலத்தீன கிரேக்கச் சொற்களிலும் யகரம் ஒலிப்பதை யும், நோக்குக. உங தொட்டாற் சுடுவதும் தொடர்ந்து பட்டால் எரித்துக் கொல் வதும் பற்றி, தீக் கொடியதென்று கருதப்பட்டு, அதன்பெயரி னின்றே தீமை என்னுஞ்சொல் தோன்றி யிருப்பினும், பிற பூதங்கள் செய்யாத பல்வேறு பெருநன்மைகளைச் செய்வதால், சிறப்பாக இரவில் இடம் பெயர்விற்கும் அறிவுப் பேற்றிற்கும் உணவு தேடற்கும் இன்றியமையாத ஒளியைத் தருவதால், தீயா னது இன்றும் போற்றப் படுவதிலும் விளக் கேற்றியவுடன் வணிக ரால் தொழப் படுவதிலும், வியப்பொன்று மில்லை. வளி (காற்று) நாற்பூதங்களுள்ளும் வலி மிக்கது வளி. ‘வேளிமிகின் வலியு மில்லை' (புறம். ருக). வலிமை மிக்கவனை வளிமகன் என்பர். "அரக்கில்லை வளிமக னுடைத்து (கலித்.உரு). மென்காற்றாகிய தென்றலாலும் தண்காற்றாகிய கொண்ட லாலும் இன்பத்தையும், வெங்காற்றாகிய கோடையாலும் குளிர் காற்றாகிய வாடையாலும் துன்பத்தையும், வன்காற்றாகிய சூற வளியால் துன்பத்தொடு சேதத்தையும், கண்ட மாந்தர், வெங் காற்றும் வன்காற்றும் வீசாவாறு காற்றுத் தெய்வத்தை வேண்டி. வந்தனர். இதை, "முளிமுதன் மூழ்கிய வெம்மைதீர்ந் துறுகென வளிதருஞ் செல்வனை வாழ்த்தவு மியைவதோ" என்னும் கலித்தொகை யடிகள் (பாலை. ககூ) உணர்த்தும். வளிதருஞ் செல்வன்என்றது காற்றுத் தெய்வத்தை. வேனிற் காலத்தில் வெங்கான வழியாகச் செல்லுங் கணவன் மீது, வெம்மையாக வீசாவாறு காற்றுத் தெய்வத்தையே தலைவி வேண்டக்கருதி, தன் கற்பினால் மயங்கினாள். முதல் தாழிசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/39&oldid=1428893" இலிருந்து மீள்விக்கப்பட்டது