பக்கம்:தமிழர் மதம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிநிலை யியல் அம்மைநோய் மக்க ளெல்லார்க்கும் பொதுவாதலால், அதை நீக்குமாறு காளி வணக்கம் நாளடைவில் நானிலத்திற் கும் பொதுவாயிற்று; ஊர்தொறும் காளிகோயில் தோன்றிற்று. கூரு மூவேந்தரும் போர் வெற்றியை விரும்பின தினாலும், பாலை வாணர் படையாகிய காட்டுப் படையைத் துணைக்கொண்டிருந் ததனாலும், போர்த்தொடக்கத்திற் கொற்றவை வழிபாடு இன்றி யமையாத தாயிற்று. மேறங்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே" என்று, தொல்காப்பியம் (புறத்.ச) கூறுதல் காண்க. இங்ஙனம் காளி வணக்கம் பொதுவியலும் வேத்தியலு மாயிற்று. தெய்வ மேறி யாடுபவர், ஆடவராயின் தேவராளன், மரு ளாளி யென்றும்; பெண்டிராயின் தேவராட்டி, சாலினி என்றும், பெயர் பெறுவர். காளி பெண்தெய்வமாதலின், அணங்காடுபவள் பெரும்பாலும் சாலினியே யென்பது, 'வேட்டுவ வரி'யால் அறி யக் கிடக்கின்றது. மருளாளியும் சாலினியும், ஆடுகளின் அல்லது ஆட்டுக்குட்டிகளின் பச்சை யரத்தத்தைக் குடிப்பது முண்டு. சேவல், ஆட்டுக்கடா, எருமைக் கடா ஆகியவை, காளிக் குக் காவு கொடுக்கப்பட்டன. ஆரியர் வருமுன்னரே தமிழர் வடநாட்டிற் போய்ப் பரவி யிருந்ததனால், வங்கநாட்டிற் காளிக் கோட்டம் கட்டப் பட்டது. அதன் பெயரே அஃதுள்ள நகருக்கு மாகி, இன்று ஆங்கில வழி யாய்க் கல்கத்தா என்று திரிந்து வழங்குகின்றது. காளி கடுஞ் சினத் தெய்வமாகக் கருதப்பட்டதனால், அலகு குத்துதல், உருமத்தில் உருண்டு வலம் வரல், தீ மிதித்தல், செடிற் குத்துதல் (Hook.swinging) முதலிய அஞ்சத்தக்க முரட்டு வினைகள் பத்திச் செயல்களாக நேர்ந்து கொள்ளப்பட்டன. காவல் தெய்வம் ஒவ்வொரு தீவிற்கும் ஊருக்கும் ஒரு காவல் தெய்வம் இருந் தது. நாவலந் தீவிற்குச் ‘சம்பாபதி' என்னும் நாவல் மகளும், மதுரைக்கு மதுராபதியும் காவல் தெய்வம். நாவல் தெய்வ இருக்கை காவிரிப்பூம் பட்டின மென்று மணிமேகலை கூறுவதால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/51&oldid=1428905" இலிருந்து மீள்விக்கப்பட்டது