பக்கம்:தமிழர் மதம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருஅ தமிழர் மதம் இன்றும் வழக்கமா யிருக்கின்றது. ஆதலால், கல்லார்க்கோ, பொது மக்கட்கோ, இல்லறத்தார்க்கோ, கடவுள் வணக்கமும் வழிபாடும் ஏற்கா தென்பது பொருந்தாது. உருவ வணக்கப் பழைய ஏற்பாடு (Old Testament) நீங்கி, உருவிலா வணக்கப் புதிய ஏற்பாடு (New Testament) குமரி நாட்டிலேயே அறிஞரிடைத் தொடங்கி விட்டதென்றும், அது இரறத்தார்க்கும் ஏற்கு மென்றும், உண்மை யறிக. ஆரியர் வருகைக்கு முற்பட்ட முதலிரு கழக இலக்கியம் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டமையால், அதினின்று சான்று காட்ட இயலா தென்றும்;மாடம் அழிந்தபின் அதினின் றெடுத்த உறுப்புக்களைக் கொண்டமைத்த கூடம் போன்ற, பிற்காலத் திலக்கியத்தி னின்றே சான்று காட்டப்படு மென்றும்; அறிந்து கொள்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/74&oldid=1428937" இலிருந்து மீள்விக்கப்பட்டது