பக்கம்:தமிழர் மதம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் யமன் முதன் முதலாக இறந்து விண்ணுலகம் சென்ற மாத் தன் என்று, அதர்வ வேதம் கூறும். ௬௯ யமன் புளுட்டோ என்னும் உரோமத் தெய்வத்தை ஒத்த வன். அவன் நாய்கள் புளூட்டோவின் கொடிய (செர்பெரசு- Cerberus என்னும்) முத்தலை நாயை ஓத்தன. பெண் தெய்வங்கள் பிருதுவி, இளா, சரசுவதி முதலிய பெண் தெய்வங்களுடன், வேறு சில ஆண் தெய்வங்களின் மனைவியரும் கூறப்பட்டுள்ள னர். ஆயின் அவர்க்குச் சிறப்புத் தொழிலில்லை. ஆண்பால் இந்திரன் வருணன் அக்கினி அசுவின் பெண்பால் இந்திராணீ வருணானீ அக்கினாயீ அசுவினி இணைத் தெய்வங்கள் த்யாவா ப்ருத்வீ, மித்ரா வருணௌ, இந்த்ராக்னீ, இந்த்ரா வருணௌ, ஸோம ருத்ரென எனப் பல தெய்வங்கள், வேத மந் திரங்களில் அடிக்கடி இணைந்தும் விளிக்கப் படுகின்றன. கணத் தெய்வங்கள் மருத்துக்கள், ரிபுக்கள், விசுவே தேவர், வசுக்கள், உருத் திரர், ஆதித்தியர், ஆப்பிரியர் என்பவர் வெவ்வேறு தேவு குழுவார். வேள்விக்கு உரிய விறகு, தருப்பைப் புல் முதலிய பன்னிரு பொருள்கள் ஆப்பிரியர் (ஆ-ப்ரீயஸ்) என்னும் தெய்வங்களாக விளிக்கப் பெறும். மூ வகைத் தெய்வங்கள் மண்ணுலகத் (பூலோக) தெய்வங்கள்: பிருதுவி, துவட்டா, வுனற்பதி முதலியவை. இடைவெளி யுலகத் (அந்தரிக்ஷ லோக) தெய்வங்கள்! வாயு, வருணன், உருத்திரன்,மருத்து, சவிதா, யமன், உழை, பிருகற்பதி முதலியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/82&oldid=1428946" இலிருந்து மீள்விக்கப்பட்டது