பக்கம்:தமிழர் மதம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் காளியை ஆரியத் தெய்வ மாக்கியதோடு, பத்திரகாளி, மாரி, பிடாரி, சண்டி (சண்டிகை), துர்க்கை, சாமுண்டி, மகிடாசுரமர்த்தனி, நிசும்பசூதனி எனப்பல பெயர் கொடுத்து, ஆரியச் சொற்களே வழங்குமாறும், பல்வேறு பெண் தெய்வ மென்று கல்லா மாந்தர் கருதுமாறும், செய்து விட்டனர். (எ) தொல்கதைக் கட்டு எஅ தமிழ நாகரிகத்தையும் மதங்களையும் ஆரியப் படுத்தற்கும், தமிழனைத் தாழ்த்திப் பிராமணனை உயர்த்தற்கும், பதினெண் தொன்மங்களையும் (புராணங்களையும்) பதினெண் துணைத் தொன்மங்களையும் (உப புராணங்களையும்) இயற்றிக் கொண் டனர். அவற்றுள் 'கந்த புராணம்' என்னும் ஒன்று மட்டும், ஓரரிசிப் பதம் பார்ப்பாக இங்கு ஆராயப் படும். முருகன் பிறப்பு "இறைவன் உமையை வதுவை செய்து கொண்ட நாளிலே, இந்திரன் சென்று நீ புணர்ச்சி தவிர வேண்டு மென்று வேண்டிக் கொள்ள, அவனும் அதற்கு உடம்பட்டு அது தப்பானாகிப் புணர்ச்சி தவிர்ந்து கருப்பத்தை இந்திரன் கையிற் கொடுப்ப, அதனை இருடிகளுணர்ந்து அவன் பக்க னின்றும் வாங்கித் தமக் குத் தரித்தல் அரிதாகையினாலே, இறையவன் கூறாகிய முத் தீக் கட் பெய்து அதனைத் தம் மனைவியர் கையிற் கொடுப்ப, அருந் ததி யொழிந்த அறுவரும் வாங்கிக் கொண்டு விழுங்கிச் சூன் முதிர்ந்து சரவணப் பொய்கையிற் பதுமப் பாயலிலே பயந்தா ராக, ஆறு கூறாகி வளர்கின்ற காலத்து, இந்திரன் தான் இருடி களுக்குக் கொடுத்த நிலையை மறந்து ஆண்டு வந்து வச்சிரத் தான் எறிய, அவ் வாறு வடிவும் ஒன்றாய் அவனுடனே பொருது, அவனைக் கெடுத்துப் பின் சூரபன் மாவைக் கொல்லுதற்கு அவ் வடிவம் ஆகுாகிய வேறுபட்ட கூற்றாலே மண்டிச் சென்ற தென்று, புராணங் கூறிற்று> என்பது திருமுரு காற்றுப்படை நச்சினார்க் கினிய குரை (ருஅ). இது, உமையொடு புணர்ந்த காம வதுவையுள் HOR பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயல்" என்னும் பரிபாடற் பகுதியைத் தழுவியது. (டூ: உஅ-சகூ).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/94&oldid=1428962" இலிருந்து மீள்விக்கப்பட்டது