பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டிய அரசர்கள்

165


வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி

யூபம் நட்ட வியன்களம் பல."
-புறம் : 5 : 16 - 21.

இப்பாண்டியனால் போற்றிப் புரக்கப்பட்ட ஒரு யாகம்; வேள்விக்குடிச் செப்பேட்டில் (Ep. Ind, 18 : P. 291) குறிப்பிடப்பட்டுளது. பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியால் வழங்கப்பட்டுப் பின்னர்க் களப்பிர அரசன் ஒருவனால் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்ட ஓர் உடைமையின் உ ரி மை யை, மீட்டு அ ளி த் த ல் காரணமாக, இக்கொடைப்பட்டயம், பெரும்பாலும், எ ட் டா ம் நூற்றாண்டின் நாற்கூறுகளில், மூன்றாவது கூற்றின்போது வெளியிடப்பட்டதாகும். இந்நன்கொடை முதன்முதலாக, எந்தச் சூழ்நிலைகளில் வழங்கப்பட்டதோ, அந்தச் சூழ்நிலைகள், எட்டாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட, இந்நன்கொடை ஆவணத்தில் இவ்வாறு விரித்துரைக்கப்பட்டுள்ளன :[இந்தியக் கல்வெட்டுக்கள் (Epigraphia India) என்ற நூலில், கொடுக்கப்பட்டிருக்கும். அப்பட்டயத்துக்கான மொழிபெயர்ப்பு பிழையுடையதாக இருப்பதால், என்னுடைய மொழி பெயர்ப்பைக் கொடுத்துள்ளேன்.] "வண்டுகள் மொய்த்து ஓலமிடும் குளிர்ந்த அரும்புகளைக் கொண்ட நாகமரங்களும், மாமரங்களும் செறிந்த மலர்ச்சோலைகள் குழ்ந்த பாகனூர்க்கூற்றம் என்ற நிலவளமும், நீர்வளமும் மிகுந்த நாட்டில் வாழும், கற்று வல்ல வேள்வியாசிரியர்கள் சொல்லித் தந்த ச்ருதி-மார்க்கம் தவறாத, கொற்கைக்கிழான், நற்கொற்றன் என்பான், வேள்வி ஒன்று செய்யத் தொடங்கினான். "வேள்வியை முற்றுவிக்கத் துணைபுரிவான் வேண்டி, கொல்லும் போர் வல்ல களிறுகள் எண்ணற்றன போக்கிப் பகை மன்னர் குலங்களை அழித்து ஒழித்த பல்யாக-முது குடுமிப் பெருவழுதி [அரசன் பட்டப் பெயரில் "சாலை" எனும் சொல், காலவெள்ளத்தால் கைவிடப்பட்டுளது:] என்னும் பாண்டியாதிராசன் ["அதிராஜர் என்ற பட்டம்; பாண்டிய அரசர்களாலும், பிற தமிழ் அரசர்களாலும், ஆறாம் நூற்றாண்டு முடிவுற்ற பின்னர், தமிழ் நாடு,