உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

384

தமிழர் வரலாறு



பட்டுள்ளார் என்பதைக் காட்டுகிறது. திருவள்ளுவர், தம்முடைய நூலைத், த்ரிவர்கத்தில் மட்டுமே கருத்துடையவர் என்பது போல, முப்பகுதிகளாகப் பிரித்துள்ளார். ஆனால், அறம் அல்லது தர்மம் குறித்துக் கூறும் பகுதியில், நான்காவது புருஷார்த்தமாகிய மோக்ஷம், அதாவது வீடு பேறு குறித்தும் சில அதிகாரங்களை ஒதுக்கியுள்ளார். முறையாகப் பின்பற்றப்பட்டால் த்ரிவர்கம் (அறம், பொருள் இன்பம் தானே. மோக்ஷத்தை அடைவதற்கு வழி செய்து விடும் எனத் திருவள்ளுவர் தெளிவாக எண்ணியிருக்க வேண்டும், இது எதுவாயினும், குறள் மனித வாழ்வின் மூன்று குறிக்கோள்களின் விளக்கமே ஆம். (See Diksitar, Hindu Administrative Institutions. Page : 35J g; shop so Lu அறத்துப்பாலில், பலராலும் அறியப்பட்டிருந்த மனுவின் தர்ம சாஸ்திரத்தையும் பொருட்பாவில், நன்கு தெரிந்திருந்த கெளடல்யரின் அர்த்த சாஸ்திரத்தையும், திருவள்ளுவர் பின்பற்றினார் எனக் கருதுவது முறையே ஆகும். இந் நூல்களே, செய்திகளின் தலையாய மூலங்கள் என்றாலும், பஞ்ச தந்திரம், இதோபதேசம், பர்த்ரிஹரியின் சாதக ஸ்லோகங்கள், இராமாயணம், மஹாபாரதம், கமந்தரியின் நீதிசாரம், மற்றும் இவற்றிற்கு இனமான இலக்கியங்களையும் புலவர் நன்கு அறிந்திருந்தார் என்பது முடிந்த முடிவாக உறுதி செய்யப்படும். இந்நூல்களில் பலவும், கி. மு. ஆறாம் நூற்றாண்டு முதல் கி. பி. நான்காம் நூற்றாண்டு வரையான காலத்தைச் சேர்ந்தவை. கி. பி. 650 ஐச் சேர்ந்த பர்த்ரிஹரியின் நூல்கள், காளிதாஸனின் சாகுந்தலம், விசாகதத்தனின் முத்ராக்ஷஸம், மற்றும் நன்கு தெரிந்த் இலக்கியங்களிலிருந்து ஆன வரிகளைக் கொண்டுள்ளன. பஞ்ச தந்திரத்திலும், இதோபதேபத்திலும் இடம் பெற்றிருக்கும் பலபாக்களின் உண்மை நிலையும் அதுவே. இவை, தமக்கென ஒருமூலத்தை உரிமை கொண்டாட வில்லை. நாட்டில் வழங்கி வந்த அறவுரைத் தொடர்கள். அவற்றை,மக்களிடையே பரப்பும் எண்ணத்தில், இந்நூல்களில் நுழைக்கப்பட்டிருக்கக் கூடும். ஆகவே, சமஸ்கிருத இலக்கியங்