உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழியக்கம், பாரதிதாசன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

தமிழியக்கம்

அறத்துக்கு நிறுவியதை
    வருவாய்க்கென் றாக்குவதில்
        அறிவு பெற்ற
மறப்பார்ப்பான் செந்தமிழ்
    மாணவரைக் கெடுத்தாலும்
        எதற்குமே வாய்
திறக்காமல் தாமிருந்தும்
    செந்தமிழ்க்குப் பாடுபடல்
        போல் நடித்தும்
சிறப்பார்போல் இல்லாது
    செந்தமிழ்க்கு மெய்யுளத்தால்
        செல்வம் ஈக. 114

சிங்கங்கள் வாழ்காட்டில்
    சிறுநரிநாய் குரங்கெண்கு
        சிறுத்தை யாவும்
தங்கிநெடுங் கூச்சலிடும்
    தன்மைபோல் தமிழ்நாட்டில்
        தமிழே யன்றி
அங்கங்கே அவரவர்கள்
    தம் மொழிக்கும் பிறமொழிக்கும்
        ஆக்கம் தேடி
மங்காத செந்தமிழை
    மங்கும் வகை செய்வதற்கு
        வழக்கும் சொல்வார். 115