பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

121



பரிமுனம் விடுத்தே அலிமுதல் யாரும்
பார்த்து அதிசயத்திடப் பொரவே
ஒருவருக்கொருவர் ஒருபுற மீண்டவொரு
புறக்குழுவொடு மீண்டத்
தரியவர் மிகுபேர் இறநதனர் உய்த்தோர்
தமக்கெனச் சிறை பிடித்தனரன்றே"

எனக் கூறி சல்காவின் வீரத்தை அஞ்சா நெஞ்சை பெருமித உணர்வு பொங்கப் பாடி விளக்குகிறார். போரிடும் சூழலையும் போர்க்களச் செய்திகளையும் விவரிக்கும்போது நம்மைப் போர்க்களத்துக்கே கொண்டு சென்று நேரில் காணுவது போன்ற மனப்பிரமையை ஏற்படுத்தி விடுகிறார்.

அதுமட்டுமா படை வீரர்களின் போர்க்கள வருகையைக் கூறும்போது, வில்லேந்தியவர்களும், வேல் பிடித்தவர்களும், கல்லெடுத்து வந்தோரும். கசையைக் கையிற் கொண்டவர்களும் போர்க்களத்தே வந்துகுழுமினர் உடற் கட்டுடையரான மல்யுத்த வீரர்களும் வாள் பிடித்த வீரர்களும் அவர்களை ஒழுங்கு நடைபோட ஆணை பிறப்பிக்கும் மேலாண் வீரர்களும் வந்து குழுமுவதை,

'வில்லினர் மிடைந்திட வேன் மி டைந்திடக்
கல்லினர் மிடைந்திடக் கசைமி டைந்திடச்
மல்லினர் மிடைந்திட வாண்மி டைந்திடச்
சொல்லினர் மிடைந்திடத் துகண் மிடைந்திட

என ஓசை நயம் ததும்பக் கூறுகிறார்.

இதேபோன்று செய்யிதத்துப் படைப்போரில் போர்க் களம் நோக்கிச் செல்லும் அபூபக்கர் (ரலி) அவர்களின் குதிரைச் சவாரியை விண்டுரைக்க வந்த புலவர்,