பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

139

சல்காவைப் போன்றே செய்யிதத்தும் முதலில் இஸ்லாத்தை எதிர்த்து நின்று பின்னர் முஸ்லிமாகி இஸ்லாத்தை எதிர்த்தவர்களே டு போரிட்டவர். எனினும், தொடக்கத்தில் இஸ்லாத்தை எதிர்ப்பவராக, பகைவராக விளங்கியமையால் இந்நூல் அவரது பெயராலேயே 'செய்யிதத்துப் படைப்போர்' என வழங்கலாயிற்று.

இந்நூல் சுமார் 200 ஆண்டுகட்கு முன்னர் இயற்றப்பட்டதாகும்.

பெருமானாருக்குப் பின்னர், முதல் இஸ்லாமிய ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்று வரலாற்றில் அழியாச் சிறப்பிட ம் பெற்ற அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் மகனான அப்துர் ரஹ்மான் என்பவர் தொடக்கத்தில் இஸ்லாத்தில் இணையும் முன்னர், இஸ்லாத்தின் விரோதிகளில் ஒருவராக இருந்தார். இஸ்லாத்தின் பரம வைரியாக விளங்கிய அபுசுப்யானின் மகளான சையிதத்து எனும் மங்கையை மணந்திருந்தார். தொடக்கத்தில் இவர்கள் இருவரும் இஸ்லாத்தின் எதிரிகளாக இருந்தபோதிலும் பின்னர், மனம் மாறி இஸ்லாத்தில் இணைந்து, இஸ்லாத்தின் விரோதிகளோடு போரிட்டு வென்று வெற்றிக் கொடி நாட்டிய வரலாற்றை விரித்துரைக்கிறது இக்காப்பியம்.

இறைவனின் இறுதித் தூதராக வந்துதித்த பெருமானாரின் அருமை பெருமைகளை செவி வழிச் செய்தியாக கேட்டறிந்து வியந்து போற்றி நின்றார். யெமன் நாட்டு மன்னர் அசுமத் இப்னு கிதாப் நபிப் பட்டம் பெற்று, அறியாமை இருளகற்றி இறையொளி பரவ அல்லும் பகலும் உழைத்து வரும் உத்தமத் திருநபியை நேரிற்கண்டு, அவரின் அருளுரை பெற்று, இஸ்லாமியநெறியைப் பரப்பும் தொண்டில் தன்னையும் தன் மைந்தரையும் இணைத்துக் கொள்ள அவாவினார். பெருமானாருக்குப் பரிசாக வழங்க அரியபெரிய பரிசுப்பொருட்களை ஒட்டகங்-