பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

“விடமுங்கிய நரகக்கனல் விளையுங்கமர் வழியோ
படியெங்கணும் உருகும்படிப் பரிவாயிடும் உலையோ
சுடுவெங்கதிர் இன்னாயிரஞ் சுரரின்கர மீண்டி
உடலுங்கன தகையாருதர் உடன்பாலை கடந்தார்.”

என வர்ணிப்பதன் மூலம் பாலை நில வழி பற்றிய ஒருவித அவலச் சுவையைப் படிப்போரிடையே ஏற்படுத்தி விடுகின்றார் குஞ்சுமூசுப் புலவர்.

துாதர் முர்ரத் அப்துர் ரஹ்மானின் உறைவிடம் சென்றபோது அசுமத்தின் மகன் மீது விதித்த பணயப் பொருள் கெடு முடிந்து விட்டதால் அச்சிறுவனை கொல்லப் பணித்த அப்துர் ரஹ்மானை நோக்கி “உங்கள் அன்புத் தந்தையின் மீது ஆணையிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். இச்சிறுவனை கொல்லாது விடுக” எனக் கூறியதோடு எந்தப் பாவமும் அறியாத அச்சிறுவனைக் கொல்லாது விட்டுவிடுமாறு இறைஞ்சி நின்றார். தந்தையின் பேரால் இறைஞ்சி நிற்கும் அத்துாதுவரின் வார்த்தை அப்துர் ரஹ்மானின் உள்ளத்தைத் தொட்டது அச்சிறுவனை கொல்லாது விடுத்ததோடு, அவனை அன்போடு தன்னுடன் இறுத்திக் கொண்டார்.

தன் தந்தை அபூபக்கர் சித்தீக் (ரலி) மீது வாஞ்சை கொண்டுள்ள அத்தூதுவரிடம் தன் பெற்றோர் குறித்து விசாரித்தார் அப்துர் ரஹ்மான். அதற்கு மறுமொழியாக முர்ரத்

“தந்தைதாய் உமைத்தான் நாடி
சஞ்சலக் கடலில் மூழ்கி
எந்தநாள் காண்போம் என்ன
எழில்பெறும் விழிநீர் சிந்தி
மைந்தனே! எனவும் கூவி
வாய்விடுத் தழவே வேலை