பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

155



மத்தின் மைந்தனையும் படை கொண்டு தடுத்து நிறுத்த முயன்றான். இதற்கஞ்சாத அப்துர் ரஹ்மானும் செய்யிதத்தும் எதிர்த்துப் போரிடுகின்றனர் அபுசுப்யானின் மூர்க்கத்தன மிகு பெரும் படையின் முன்பு அப்துர் ரஹ்மானின் சிறுபடை பொருத நேர்ந்தது இஃது அப்துர் ரஹ்மானுக்கேற்பட்ட பெருஞ்சோதனையாக இருந்தது.

இக்கடுஞ் சோதனையினின்றும் தன் வழிப்பட்ட அப்துர் ரஹ்மானுக்கும் செய்யிதத்துக்கும் உதவும் வண்ணம், இந்த இக்கட்டான நிலையை ‘வஹி’ மூலம் பெருமானாருக்கு இறைவன் அறிவிக்கிறான். உண்மை உணர்ந்த அண்ணலார் அப்துர் ரஹ்மானுக்குத் துணை நிற்கும் பொருட்டு நரர் புலி அலியாருடன் ஆமிர், சுபைர், மிக்தாது ஆகியோரைப் பெரும் படையுடன் அனுப்பி வைக்கிறார். அப்துர் ரஹ்மானுக்குத் துணை செய்யச் செல்லும் இப்படையின் தன்மையை,

“கடலை நடுங்கக் கரைகளும் நடுங்கக்
ககனமும் நடுங்கிடச் சுடர்கள்
உடலுளம் நடுங்க உறும்படை நடுங்க
உலகமும் நடுங்குற வனந்தன்
விடமுடி நடுங்க மழைமுகில் நடுங்க
விரிவுறு வரைபல நடுங்க
நடமிடு பரிகள் ஆக்ரமித் தடர
நால்வருங் களிப்புறப் போந்தார்.”

எனப் புலவர் கூறும்போது, கடலும் வானும் நிலமும் மலையும் நடுங்கும் வண்ணம் வீரத் திறலுடன் நால்வரும் நடத்திச் செல்லும் போர்ப்படையின் மாட்சியை,குபிர் வழி நடந்து இஸ்லாத்திற்கும் இன்னல்பல தந்து வரும் அபுசுப்யானின் படையை அழித்தொழிக்கும் ஆர்வப் பெருக்குடன் செல்லும் படையினரின் களிப்பையும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்துவிடுகிறார்.