பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

183

திருமண வாழ்தது

முஸ்லிம் தமிழ்ப் புலவர்களால் தமிழில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட மற்றொரு இலக்கிய வகை ‘திருமண வாழ்த்து’ என்பதாகும்.

முந்தைய தமிழ் இலக்கியங்களில் மணமக்களை வாழ்த்தும் பகுதிகள் இடம்பெற்றிருக்கலாம். ஆனால், ‘திருமண வாழ்த்து' என்ற பெயரில் தனி வடிவமோ வகையோ உருவாக்கப்பட்டிருக்கவில்லை. இவ்வகையில் புதுவகையான இலக்கிய வடிவத்தைத் தோற்றுவித்து வளர்த்த பெருமை இஸ்லாமியத் தமிழ்ப் புலவர் பெருமக்களையே சாரும்.

இவ்வகையில் இயற்றப்பட்ட முதல் ‘திருமண வாழ்த்து’ நூல் எட்டையபுரம் உமறுகத்தாப் புலவரால் எழுதப்பட்ட ‘செய்தக்காதி மரைக்காயர் திருமண வாழ்த்து' என்பதாகும். 448 கண்ணிகளாலான இத்திருமண வாழ்த்து தனிவகையானதொரு அமைப்புடைய இலக்கியப் படைப்பாக விளங்குகிறது

இந்நூலாசிரியர் பெயர் 'எட்டையபுரம் உமர்கத்தாப் புலவர்’ எனக் கூறப்படுகிறது. பெருமானார் பெருவாழ்வை சீறாவாக விரித்துப்பாடி பெருமை கொண்ட உமறுப் புலவரே இவர் என்பாரும் உண்டு. சீறா பாடிய உமறுப் புலவரும் திருமண வாழ்த்துப் பாடிய உமறு கத்தாப் புலவரும் ஒருவரல்ல, வெவ்வேறு புலவர்கள் என்று கூறுவாறும் உளர்.

உமறுப்புலவரின் சீறாப்புராணத்தையும் எட்டையபுரம் உமறுகத்தாப் புலவரின் செய்தக்காதி மரைக்காயர் திரு மண வாழ்த்து' நூலையும் ஒப்பிட்டு ஆயும்போது பாடல் நடைச்சிறப்பும் சொல்லாட்சியும் வேறுபட்டவையாகவே