பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

அடைந்த துன்பங்களையெல்லாம் அழகுறத் தொகுத்து வழங்கி படிப்போரிடையே கழிவிரக்கக்தை ஏற்படுத்தி விடுகின்றார். கடும் சுரத்திடை நடந்து செல்லும் அம் மூவரும் எவ்வாறெல்லாம் இன்னலுற்றனர் என்பதை:

"துன்பமொடு மூவருமே அந்தச் சுர

நிலத்தில் நடக்கையிலே

வன்மனமார் கரடி புலியிந்த மாண்

பினரைப் பார்த்துரைக்கும்

நீதியுள்ள உங்களுக்கு விதி நேர்ந்தனால்

சுரத்தின் மிகும்

வேதனைதான் வந்ததை நீங்க வேகன்

செல்வானென் றேகும்

இந்தப்படி பலமிருகம் இந்த எழிலினரைப் பார்த்துரைக்க';

எனக் கூறுகிறார் ஆசிரியர்.

இன்னும் பசிக் கொடுமையால் அவர்கள் பெருந்துன் பம் அடைகிறார்கள். அரண்மனை சுகவாசத்தில் காலங் கடத்திய அரசியினாலும் மன்னனாலும் பசியுடனும் களைப்புடனும் நீண்ட தூரம் நடக்க முடியவில்லை. தளர்ந்து கீழே வீழ்ந்து விடுகிறார்கள். அப்பாஸ் பெற் றோர் இருவரையும் தன் துன்பம் பொறுத்துத் துாக்கிச் செலகிறான். இதனை,

"இங்கிருக்கில் அவஸ்தைமிக நமக்கணுகுமென்று

தாய் தந்தைக்குச்

சங்கையொடும் சொல்லி பாபா

தம்மைத் தாங்கி வலத் தோளினிலும்

மதிமிகுந்த தாயார் தம்மையிடத்

தோலிலும்தான் வைத்துக்கொண்டு

நேயமுடன் கடுஞ்சுரத்திற் மிகுநெடுந்தொலை”