பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

அலைந்து திரிந்து அல்லறுற்றது இரண்டாவது மவுத்து எனவும், மெஹ்ர்பானுவின் மசலாக்களுக்கு விடை பகர்வது மூன்றாவது மவதது எனும் தன் சொந்த வாழ்க்கை நிகழ்ச்சிகளையே புதிர் போல அமைந்து அப்பாஸ் கேள்வி கேட்க, அதற்குச் சரியான மறு மொழி கூற இயலாத மெஹர்பான், இதற்கான தக்க விடையை நாளை சொல்வதாகக் கூறிச் செல்கிறாள்.

அப்பாஸின் கேள்விக்கான பதிலை, அப்பாஸ் தங்கியுள்ள இடத்திற்குச் சென்று அவன் மூலமே, மறைமுகமாக அறிந்து கொள்ளத் திட்டமிடுகிறாள். இதற்காகத் தன்னை அழகுப் பதுமையாக அலங்கரித்துக் கொள்கிறாள். அவள் செய்து கொள்ளும் அலங்காரங்களை அழகுச் சுவை ததும்ப அற்புதமாக வர்ணித்துப் படிப்போரைப் பரவசப்படுத்துகிறார். ஒப்பனை முடித்துக் கட்டிலில் அமர்ந்திருக்கும் மெஹர்பானுவின் தோற்றப் பொலிவை,

"பூவையன்ன மயிலென்னவே வெகு
    பூவை மடவார் சூழல்
காவிக்கயல் விழிமடவாள் செம்பொன்
    கட்டிலின் மேல் வீற்றி ருந்தாள்"

என வர்ணிக்கிறார். அதுமட்டுமா அவள் அழகுப் பதுமையாக நடந்து செல்லும் பாங்கினை சொல்லோவியமாக வடித்துக் காட்டுகிறார்.

"அன்னமெனும் திருநடையாள் மிகும் ஆட
     வரைக் கொலும் விழியாள்
சின்னவிடைத் தனங்கள் விம்ம அந்தச்
    சேயிழையாள் மணிகள் மின்ன
சொன்னமணிச் சிலம்பு கொஞ்ச அந்தத்
      தோழியுடன் இருவருமாய்க்