பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

அனைவரையும் கையகப் படுத்திக் கைதிகளாகத் தன் இருப்பிடம் கொண்டு சென்றாள் சைத்தூன் மயக்கமடைந்து கிடந்த முஹம்மது ஹனீபு, மயக்கம் தெளிந்தவராகத் தன் இல்லம் ஏகித் தன் தாயாரை அடைந்து நடந்தவற்றை விவரித்தார்.

ஹனீபின் நண்பர்களை வெற்றி கொண்ட சைத்துான் வெற்றி பெருமிதத்தால் உந்தப்பட்டவளாக மதீனா சென்று வெற்றிவாகை சூடவிரும்பிச் சென்றாள். இதனையறிந்த முகம்மது ஹனிபு சைத்துானுடன் போரிட்டுவெற்றி பெற்றார் ஹனீபிடம் தோல்வியைத் தழுவிய சைத்தூன் இஸ்லாத்தையும் தழுவ வேண்டியதாயிற்று. இப்போர்களின் விளைவாக ஹனிபு இன்னல்கள் பலவற்றை ஏற்க நேரிட்டது. இதனால் அடுத்தடுத்துப் பல போர்களைச் சந்திக்கவும் நேர்ந்தது போர்க்களச் சூழ்ச்சியொன்றுக்குப் பலியாகி ஹனீபு நோய்வாய்ப்படவும், அந்நிலையில். கடலுக்கப்பாலிருந்த ஹரியாபரி என்பவளால் கவர்ந்து செல்லப்பட்டார். ஹனீபைத் தேடிச் சென்றவர்கள் பல்வேறு இடர்களை ஏற்று இறுதியில் இருக்குமிடம் தெரிந்து மீட்டு வரப்படடார் என்பதும், இப்போர்களின் விளைவாக இஸ்லாத்தை அறியாதிருந்த மன்னர்களும் வீரர்களும் வீராங்கணைகளும் இஸ்லாத்தின் மேன்மையையும் உன்னதத்தையும் அறிந்து உணர்ந்து இஸ்லாத்தோடு இணைந்தனர் என்பது இந்நூல் தரும் செய்திகளாகும்.

இந்நூலாசிரியர் 'தமிழில் வெள்ளை மொழியாகவும் கொஞ்சம் வசனமாகவும் கவியாகவும் அனைவரும் வாசித்து இன்புற அருளியது' எனக் குறிப்பிடுவதறகேற்ப மிகஎளிய நடையில் இந்நூலின் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன.

ஒரு பெண்மணியைப் பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு எழுதப்பட்டுளள இந்நூல் படித்துப் புரிந்து கொள்வதற்கு மிக எளிதாக உள்ளது. ஓசையிடடு படித்து மகிழ்வதற்கேற்ற சந்தத்தில் பாடலின் சொல்லாட்சிகள்