பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

இயற்றிய நூலை அடியொற்றி எழுதப்பட்டதென்பது தெளிவாகிறது.

'நூறு நாமா' எனும் பெயர் 'நூர் நாமா' என்பதன் சிதைவாகும் 'நூர்' என்ற சொல்லிற்கு 'ஒளி' அல்லது வெளிச்சம் என்பது பொருளாகும்.

இறைவன் ஒளியால் இவ்வுலகைப் படைத்தான் என்பதை மனித இன வரலாற்று அடிப்படையில் இந்நூல் விவரிப்பதால் இப்பெயர் பெற்றது.

'நூறு நாமா' வின் இறை வாழ்த்துப் பாடல். இறைவனின் தன்மையையும் அவனது அருட்டிறத்தையும் இலக்கியச் சுவை நன சொட்டச் சொட்டச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர். காயும் பூவும் போல, பாலும் அதிலுள்ள ஆடையும் போல வல்ல அல்லாஹ் எங்கும் இரண்டறக் கலந்து நிறைந்துள்ள பான்மையை,

'வானில் கடலில் குறுஷறுசில்
        வனத்தில் உயர் ஆகாயத்தில்
தானப் பதியினின் மற்றுமுள்ள
      தலங்கள் முழுதிலும் எந்நாளுமே
காயும் பூவும்போல் பாலிலா டை
      கலந்த உவமைபோல் சற்றேனுமோ
ஈனுமனுகாமல் நிறைந்த சோதி
        இறைாயான் தனைப்போற்றி செய்குவோம்’

என இறை பெருமையைப் பறைசாற்றி, வல்ல அல்லாஹ்வின் உறுதுணையோடு நூலாக்கப் பணியை மேற்கொள்கிறார் ஆசிரியர்.

முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதாம்(அலை) அவர்கள் அவ்வா தாயாருடன் இனிது வாழ்ந்துவந்த காலத்தில்