பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முனாஜாத்து இலக்கியங்கள்

இஸ்லாமிய இலக்கிய வடிவங்களிலே மிகச் சிறந்த மற்றொரு புதுவகை இலக்கிய வடிவம் ‘முனாஜாத்து' என்பதாகும். 'முனாஜாதது' எனும் அரபுச் சொல்லுக்கு, இரகசியமாய்ச் சொல்லுதல்’ எனப் பொருள் கூறப்படுகிறது இறைவனிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தல் எனவும் இச்சொல்லுக்கு விளக்கம் தரப்படுகிறது. இதன் மூலம் முனாஜாத்து என்பதற்கு இஸ்லாமிய பக்திப்பனுவல் வாயிலாக இறையருள் வேண்டும் இறைவேட்டல் 'பாடல்கள்' எனும் கருத்துப் பெறப்படுகிறது. இச்சொல்லுக்குப் பொருள் விளக்கம் கூறவந்த செ.மு. செய்யிது முகம்மது ஆலிம் புலவர் அவர்கள் அல்லாஹாத் தஆலா வினிடத்திலும் அவனது திருவருளைப் பூண்ட மகான்களிலொரு வரிடத்திலும் மன்றாடி வேண்டி நிற்றற் பொருளில் பாடப்படும் எண் வரையறுக்கப்படாத தமிழ்ச் செய்யுளுக்குப் பக்தி கிகாமணிகளாய் விளங்கிய பெரியோர்களால்வழங்கலாயிற்று' எனக் கூறியுள்ளது கவனிக்கத் தக்கதாகும். சுருங்கச் சொலவதெனில் இறைவன் மீது, அவன் தூதர்கள் மீது இறைநேசச் செல்வர்கள் மீது பாடப்படும்புகழ்ப் பாக்கள் அல்லது பக்திப் பாடல்கள் என்று கூறலாம்.

இறையருளை இறைஞ்சும் இம்முனாஜாத்துப் பாக்களை பெரும்பாலான முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் பாடியிருக்கிறார்கள் தீன் நெறியாகிய இஸ்லாத்தின் கொள்கைகோட்பாடுகளையும் சாதாரண பாமரரும் எளிதாகப் புரிந்து கொள்ளப் பெரிதும் உதவுவது இம்'முனாஜாத்து’ப்பாடல்களேயாகும்.

இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வடிவகளில் எண்ணிக்கையில் கிஸ்ஸா இலக்கியங்களுக்கு அடுத்தபடியாக மிக அதிக அளவில் இயற்றப்பட்டவை முனாஜாதது இலக்கியங்களே யாகும்.