பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 ல் தமிழ்க்கடல் ராயசொ இராமபிரானைத் தன் கூற்றாகவும், விராதன், கவந்தன், வீடணன், பிரகலாதன் இவர்கள் வழிபாடாகவும், அதுமன், சுக்கிரிவன் (மகாராசர்) வாயிலாகவும்; இந்திரன், கருடன், வருணன், பிரமன், சிவபெருமான் இவர்கள் வாய்மொழி யாகவும் அமைக்கும் பாடல்கள் இராமாவதாரத்தின் பெருமையை எடுத்துக்காட்டுவனவாக அமைந்துள்ள நேர்த்தி சொல்லுந் தரமன்று. தமிழ்க்கடல் இராய.சொ. தம் வாழ்நாளில் இறை வழிபாட்டுத் தொகுப்புகள் பல வெளியிட்டுள்ளார்கள். தாமே அந்த வழிபாட்டில் மூழ்கி வெளியிட்டவை இவை. அரி - அரன் வேறுபாடின்றி இரு கடவுள்களையும் இதயந் தோய்ந்து ஈடுபட்டு வழிபட்டதனால் அவர்தம் ஆன்மா அமரர் உருவில் சில காலம் வைகுண்டத்திலும், சில காலம் கைலாயத்திலுமாக இருந்து வரும் என்று என் மனம் எண்ணுகின்றது. - 9. இறைவர் அறுவர் வணக்கம்", இச்சிறிய தொகுப்பு நூலில் விநாயகர் வணக்கங்களாக 10 பாடல்கள்; முருகன் வணக்கங்களாக 10 பாடல்கள்; சிவபெருமான் வணக்கங் களாக 10 பாடல்களும்; திருமால் வணக்கங்களாக 10 பாடல்களும்; மலைமகள் வணக்கங்களாக 10 பாடல்களும்; கலைமகள் வணக்கங்களாக 10 பாடல்களும்; வாழ்த்தாகக் கச்சியப்பர் அருளிய பாடல் ஒன்றுமாக 61 பாடல்கள் அடங்கியுள்ளன. நூலை துணுகி நோக்கினால் தமிழ்க் கடலின் இலக்கியப் பயிற்சி தெளிவாகும். . . விநாயகர் வணக்கங்களாக கபில தேவர் (11-ஆம் திருமுறை), உமாபதி சிவம், பெருந்தேவனார், திருமூலர் பரஞ்சோதி முனிவர், கடவுள் மாமுனிவர், சைவ எல்லப்ப நாவலர், அதிவீரராம பாண்டியன், நந்திக் கலம்பகம், பாரதி பாடல்கள அடங்கியுள்ளன. 11. கொத்தமங்கலம் சி.சு.சி.வெ.சி. சின்னகருப்பன் செட்டியார் மணிவிழா (சாந்தி) வெளியீடு (11-6-70).