பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆசிரியரின் பணிந்துரை பல நூறு காதம் பரப்பளவு கொண்டு குமரிக்கண்டம் என்று குறிக்கப்பட்ட பழத் தமிழகத்தைத் தென்கடல் தன் பசி தீர்க்கப் பலகாலும் விழுங்கிற்று. கடல் கொண்ட நெடுதில் மருங்கில் எஞ்சி நின்ற திலமே இன்றைய தென்குடு. தமிழ் மண்ளே விழுங்கிய கடல் அந்த மண்ணில் வளர்ந் திருந்த கய இலக்கிய நாகரிக நல்வாழ்வுச் செய்யுங் களையும் கலைத்தது. அவற்றின் சுவை கண்டு விட்டதால் மேலும் ஓயாது உண்பதாயிற்று; தமிழ் நிலத்தையும் தொடர்ந்து அரிப்பதாயிற்று. தன் அலக் கரங்களால் அரித்தும் அனைத்தும் பூம்புகார் முதலான எழில் மிகு பட்டினங்களையே கொண்டது கடல். தமிழ்ச் சுவைகண்ட கடலின் வேட்கையைத் தணிப்பான் போலும் நாட்டவரிடம் மீதமிருந்த சுவடிகள் பலவும் ஆற்று வெள்ளத்துக்குப் பலியாக்கப்பட்டு, கடலுக்கு விருந்தாக்கப் பட்டன. அறியாமையில் ஆழ்ந்த தமிழன் தனது அறிவுக் கடலையே, இயற்கைக் கடலிடம் ஒப் படைத்து விட்டான். அதனால் தான் போலும் இரக்க உணர்வு கொண்டு '9' வென்று அவல ஓசை எழுப்பு கின்றது அந்தக் கடல்! கவிஞர் முடியரசன் அவர்கட்கு, அந்தக் கடலின் அலை ஓசை அப்படித்தான் தோன்றுகின்றது.