பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

உவமைக்கவிஞர் சுரதா


நூல் : ஏன் புலால் மறுத்தல் வேண்டும்? (1930) பக்கம் - 53
நூலாசிரியர் : பண்டிதர் பாலசுந்தரம் பிள்ளை
Criminal Code - குற்றச் சட்டம்

மெக்காலே சட்டம் இயற்றும் குழு'வின் தலைவராக இருந்து, இந்தியாவில் குற்றச் சட்டம் (Criminal Code) இயற்றினார். அச்சட்டம் இன்றும் இந்திய அறிஞர் அனைவராலும் பாராட்டப்படுகின்றது.

நூல் : மெக்காலே பிரபு (1930) பக்கம் :55
நூலாசிரியர் : பி. எஸ். இராஜன்
Advocate General – தலைமை வழக்கறிஞர்

மெககாலே, இந்தியாவின் நிலை, சீதோஷ்ண அளவு, மக்கள் குணம், வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றி எல்லாம் அறிந்து கொள்ள முயன்றார். வங்காளத்தில் தலைமை வழக்கறிஞராய் (Advocate General) இருந்து இந்தியாவைப் பற்றிய அனுபவம் மிக்காராய் இலண்டனில் வந்திருந்த போபஸ் ஸ்மித் என்பவரிடம் சென்று பலவாறு விசாரித்தார்.

நூல் : மெக்காலே பிரபு (1930) பக்கம் : 45, 46
நூலாசிரியர் : பி. எஸ். இராஜன்
Fellow ship - உறுப்பினர் உரிமை

மெக்காலே, கேம்பிரிட்ஜ் சர்வ கலாசாலையால் நன்கு கெளரவிக்கப்பட்டது. அவருக்கு இருமுறை அத்தியக்ஷகரின் பொற்பதக்கம் அளிக்கப்பட்டார். இந்த இரு முறைகளிலும் அவர் அழகிய கவிதைகள் புனைந்ததற்காகவே பொற் பதக்கங்கள் பெற்றார். அவருக்கு, இவற்றுடன் கிரேவன் சர்வகலாசாலை உபகாரச் சம்பளமும் கிடைத்தது. இவை அனைத்தும் அவருக்குப் பெருஞ் சிறப்பை அளித்தன. சில ஆண்டுகள் கழிந்த பின்னர் அவருக்குச் சர்வ கலாசாலையின் உறுப்பினர் உரிமை (Fellowship) கிடைத்தது.

மேற்படி நூல் : பக்கம் 13, 14