உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 புலவரவர்கள் தாம் கல்லூரிக்குப் போக முடியாதவாறு பிணியுற்றிருந்தார். வேங்கடசாமி நாட்டாரை வரச் செய்து தமக்கீடாகத் தமிழாசிரியராக இருத்தற்குத் தகுதியுடையவர் இவரே என அக்கல்லூரித் தலைவர் ஷேராக்குத் துரைக்குக் கடிதம் எழுதினர். தலைவரும் இவரை அன்புடன் ஏற்று அலுவல் அளித்தார். நாட்டார், கல்லூரி மாணவர் மகிழும்படி திறமையாகக் கற்பித்தார். நாட்டார் பாடங்கற்பிக்கும் காலங்களில் அவருடைய தோற்றப் பொலிவும் இன்சொல்லும் சோர்விலாத சொல் வன்மையும் குணநலங்களும் மாணவரின் உள்ளங்களைக் கவர்ந்து விடும். மாணவர் இவரிடத்து அளவற்ற அன்பும், மதிப்பும் கொண்டிருந்தனர். கல்லூரிப் பாடப் படிப்பின் தொடர்பாகத் திருவள்ளுவர், கம்பர் முதலாய புலவர்களையும் மருத்துவம் வானநூல் முதலிய கலைகளையும் சைவம் வைணவம் முதலிய கலைகளையும் வேளாண்மை, வணிகம் முதலிய தொழில்களையும் மற்றும் அறிவு வளர்ச்சிக்குரிய பல திறப்பட்ட பொருள்களைப் பற்றியும் விரிவுரையாற்றி மாணவரின் பொது அறிவை வளர்ப்பார். நாட்டார் தம் மாணவர் பலர் முதன்மையாகத் தேறிப் பதக்கமும் பரிசும் பெறுவர். தமிழ் காரணமாகக் கல்லூரிக்குச் சிறந்த பெயர் உண்டாயிற்று. கல்லூரித் தலைவரும், ஏனைய ஆசிரியர்களும் நாட்டாரிடத்தில் மேன்மேல் அன்பும். நன் மதிப்பும் உடையவர் களாயினர். 1933ஆம் ஆண்டுவரை நாட்டார் அவர்கள் எஸ்.பி.ஜி. கல்லூரியில் பெரும் புகழுடன் பணியாற்றினர்கள். அந்த ஆண்டு அந்தக் கல்லூரியை அதிகாரிகள் முடிவிடவே, H H நாட்டார் அவர்கள் வேறு தக்க இடம் நாட வேண்டிய தாயிற்று. அண்ணுமலை அழைப்பு o அந்த ஆண்டிலேயே இவரது சேவைக்கு அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் இடம் அமைந்தது. புலவர்களுக்கும், இளங்கலைஞர்களுக்கும் பாடம் கற்பிக்கும் புதிய வேலையை எற்றுப் பணியாற்றினர். அங்கும் மாணவர் உள்ளங்களை வழக்கம்போல் கொள்ளை கொண்டார். பண்டிதமணி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/102&oldid=880911" இலிருந்து மீள்விக்கப்பட்டது