பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 சார்பில் இவர் நிகழ்த்திய தொல்காப்பிய ஆராய்ச்சி உரைகள் அறிஞரால் பெரிதும் பாராட்டப்பெற்றன. அண்ணுமலைப் பல்கலைக் கழகச் சார்பில் நிகழ்த்திய சிலப்பதிகார ஆராய்ச்சி உரைகளும் அவ்வாறே பாராட்டப்பெற்றன. 1939இல் இவர் இலங்கை சென்று ஆங்குள்ள விவேகானந்த சங்கம் முதலியவற்றில்-திறம்படச் சொற்பொழிவாற்றித் திரும்பினர். 1940இல் சென்னையில் கலித்தொகை மாநாட்டில் தலைமை யுரை நிகழ்த்தினர். அதே ஆண்டில் திருப்பதியில் நடந்த அனைத்திந்திய பத்தாவது கீழ்த்திசைக்கலை மாநாட்டில் வஞ்சி மாநகரைப் பற்றிய சொற்போரில் கலந்து கொண்டார். அதை அடுத்து, சென்னையில் நடைபெற்ற சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டில் நல்லறிஞர் கூடி இவருக்கு 'நாவலர்’ பட்டம் வழங்கினர். எழுத்துப் பணி இவர் எழுதிய நூல்கள் வேளிர் வரலாறு, கபிலர், சோழர் சரித்திரம், கண்ணகி சரித்திரம், கள்ளர் சரித்திரம் என்பன. இவையேயன்றி கீழ்க்கணக்கு நூல்களுக்கும் மூதுரை முதலிய நீதிநூல்களுக்கும், திருவிளையாடற் புராணம், சிலப்பதிகாரம், அகங்ானூறு, மணிமேகலை முதலிய பெரு நூல்களுக்கும் விழுமிய தெளிவுரை எழுதியுள்ளார்கள். இவர் எழுதியுள்ள கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப் பெற்ற சிலவும், இவர் திருச்சி வானெலி நிலையத்திலிருந்து பேசிய உரைகள் சிலவும் கோவை செய்யப் பெற்றுக் கட்டுரைத் திரட்டு என்ற பெயரில் இருபாகங்களாக வெளியிடப் பெற்றுள்ளன. நாவலரின் நற்குணங்கள் நமது நாவலர் நாட்டார் ...”/ நற்குணங்களுக்கும் உறையுள் ஆவர். வெகுளி என்பதே"சிறிதும் இல்லாதவர். பொறுமையை அணியாகக் கொண்டவர். யாவரிடத்தும் புன்னகை தவழும் முகத்தோடு இன்சொலால் இயம்பும். இயல்பினர். எவரிடத்தும் இரக்கம் கொண்டு உறுதுணை செய்யும் உளநலமுடையவர். கற்பிக்கும் ஆற்றல் நன்கு கைவரப் பெற்றவர். சமய நூல்களுக்கும் பக்திப் பனுவல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/104&oldid=880915" இலிருந்து மீள்விக்கப்பட்டது