பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 முதலாகக் கொண்டுள்ள தனிச் சிறப்பைப் பெறுகிறது. திரு எனும் சொல் அழகு, செல்வம், கண்டாரைக் கவர்ந்திடும் இயல்பு எனும் பொருள்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. உமறு பயந்த உயர் காப்பியம் திருவினும் திருவாய்' எனத் தொடங்கிப் பீடுநடை போடுகிறது. தமிழ்ப் பண்பு == +. இது பிறமொழிப் பெயரினைக் கொண்டிருந்தாலும் தன்மை யில் தமிழ்ப் பண்பையே கொண்டிருக்கின்றது. அரேபியா பாலைவனத்தைப்பற்றி நாட்டுப் படலத்தே பாடவந்த புலவர், தமிழகத்தின் சோலையையே கூறுகின்றனர். ஈச்சமரமும், சைத்துரன் மரமும் பரவலாகக் கொண்ட மணற் பரப்பில், தமிழகத்தே நிறைந்துள்ள அகிலும் அசோகும், சண்பகமும் சந்தனமும், வேங்கையும் கோங்கும், குங்குமமும் குறிஞ்சியும் செழித்து வளர்ந்திருக்கும் காட்சியைக் காட்டுகிருர். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய ஐந்திணை நிலங்களும் அமைந்துள்ளன எ ன் று ம் கூறுகின்றர். அரேபியாவைப் பற்றிப் பாடவந்த புலவர், தமிழ் நாட்டையே காட்டிவிட்டார் என்பது மட்டுமன்றி அங்குள்ள பண்பாட்டிலே பழக்க வழக்கங் களிலே தமிழ் மணங் கமழ்ந்திடவும் செய்துவிட்டார். நபிகள் தோற்றம் காப்பியமெனும் கன்னிக்குத் தன்னேரிலாத் தலைவன் வேண்டும். இவ்வருங்காப்பியத்தின் தலைவர், நபிநாயகம் ஆவார். இவர் அரேபிய நாட்டிலே அப்துல்லா என்பார்க்கும் ஆமீன அம்மையார்க்கும் ஒரே மகளுகத் தோன்றினர். இவர் பிறப்பின் சிறப்பைக் கூறவந்த கவிஞர், நெறிநிலை திரியா மருண்மதம் மிகுந்து நெடுநிலம் எங்கணும் பரந்து துறவறம் தவறி இல்லறம் மடிந்து சுடரிலா மனையது போலக் குறைபடுங் காலம் இருளெனுங் குயிரின் குலமறுத் தறநெறி விளக்க மறுவிலா தெழுந்த முழுமதி போல முகம்மது நபியிறங் தனரே ! என்று பாடிக் கவிரசம் தந்து பரவசமடைகிருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/140&oldid=881000" இலிருந்து மீள்விக்கப்பட்டது