பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 சாப்பாட்டு அறை பின்னர், சாப்பாட்டு அறைக்குச் செல்வோம். அங்கே இன்றியமையாது வேண்டிய பொருள்கள் அவரவர் வழக்கத் திற்கேற்ப மாறுபடலாம். கலை வேண்டுமானல் ஒரு முறையை மேற்கொள்ளலாம். ஒன்று மேட்ைடு முறை; மற்றென்று தமிழ் நாட்டு முறை. ? உண்கலங்கள் அநேகமாகப் பயனுக்கேற்ருற்போல ஒரே வி த மா ன வேலைப்பாடுள்ளனவாக இருக்க வேண்டும். அவற்றைக் கழுவி அடுக்கி வைத்திருக்கிற முறையில் கலை கமழ வேண்டும். பால், மோர், தயிர், பழம், சர்க்கரை, வெண்ணெய் போன்ற பொருள்களை ஓர் அலமாரியில் உள்ளே எறும்பு செல்லாதபடி கால்களிலே தண்ணிர் ஊற்ற வசதி யுடைய நிலையில், அமைத்து வைப்பது வெறும் பயன் மட்டு மன்று; கலையுமேதான். செல்வர்கள் குளிர்ப்பமைவு அதற்குப் பதில் வைத்துக் கொள்ளலாம். ". சமையல் அறை சமையல் அறைக்குச் சென்ருல் அங்கேதான் கலை முழுவதும் வெளிப்பட வேண்டும். ஏழையின் குடிசையான லும் சரி, செல்வரின் மாளிகையானலும் அங்கே பொருள்களை வைக்கும் முறையில் கலையைக் காணவேண்டும். நடுத்தர மான வீட்டில் சமையலறையில் கலையைக் காண வேண்டும் என்ருல் எப்படி இருக்க வேண்டும்? ஏனைய அறைகளை விடச் சமையலறை சற்றுப் பெரியதாக இருத்தல் நல்லது. அடுப்பு, அதற்குமேல் புகைபோக்கி, அடிப்பகுதியில் மழைக் காலத்தில் மட்டும் விறகுகளைக் காயவைத்துக் கொள்ளப் போதுமான இடம் இவை வேண்டும். ஆல்ை தரையிலே அடுப்புகளை அமைத்து விட்டால் இந்த வசதி ஏற்படாது. அவ்வறையில் பொருள்களை அமைத்திருக்கும் முறை உட்சென்றவுடன் அறை விசாலமானது என்று காட்ட வேண்டும். ஆளுல், வேலை செய்பவர்களுக்கு அலைச்சல் அதிகம் இருக்கக் கூடாது. அடுப்பின் பக்கத்திலே சிமிட்டியாலான ஒரு மேசை போன்ற உயரமான திண்ணை நாடோறும் கழுவி விடக்கூடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/176&oldid=881084" இலிருந்து மீள்விக்கப்பட்டது