பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 இருக்கலாம் என்று கினைக்கும் தவருண எண்ணத்தினின்று நீங்கினுல்தான் எல்லாருடைய வீட்டிலும் கலே கமழும். வேலைக்காரர்களைக்கொண்டு வேலைகளைச் செய்யச் செய்து, பொறுப்பை மட்டுமாவது மகளிரே ஏற்று நடத்த வேண்டும். அப்பொழுதுதான் மனையிற் கலை நிறைந்திருக்கும். கலை நிறைந்த மனையில் வாழ்வு மகிழ்ச்சியாய் இருக்கும். மகிழ்ச்சி நோயைப் போக்கும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வ மாகும். ஆகவே அத்தனைக்கும் கலை இன்றியமையாதது. அதுவே அடிப்படையென்று கூடக் கூறலாம். எனவே, கலை கிறைந்த இல்லத்தில் இல்லாதது உண்டோ ? அருஞ்சொற்பொருள் : * - மிளிர்கின்றது - விளங்குகின்றது; கம்பீரமான - எ டு ப் ப ா ன : அளவளாவ - பேசி மகிழ; கமழ - மணக்க, விளங்க; ஒரும் - உணரும். வினுக்கள்: 1. சில வீடுகளில் கலை விளங்குவதற்கும் விளங்காததற்கும் காரணங்கள் யாவை? 2. வீட்டின் அமைப்பில் கலை எவ்வாறு வெளிப்படும்? 3. வீட்டின் அறைகளைத் தேர்ந்தெடுத்தலில் எவ்வாறு கலை அமைகிறது? 4. வீட்டில் பொருள்களை அமைக்கும் முறையை எழுதுக. 5. வீட்டுப் பொருள்களை எவ்வாறு தேர்ந்தெடுத்தல் வேண்டும்? 6. இடத்திற்கு ஏற்றவாறு பொருள்களை அமைக்கவேண்டும் என்பதை ஓர் எடுத்துக்காட்டுடன் பதினைந்து வரிகளில் எழுதுக. 7. படிக்கும் அறை எவ்வாறு அமைதல் வேண்டும்? 8. படுக்கை அறை எவ்வாறு அமைதல் வேண்டும்? 9. சாப்பாட்டு அறை எவ்வாறு அமைதல் வேண்டும்? 10. சமையல் அறை எவ்வாறு அமைதல் வேண்டும்? 11. பொருள்களை வைக்கும் அறை எவ்வாறு அமைதல் வேண்டும்? 12. வீட்டின் சுற்றுப்புறமும் தோட்டமும் எவ்வாறு அமைதல் வேண்டும்? 13. கலையைப் பெருக்கும் வழி யாது? 14. கலை கமழ, வீட்டுப் பொறுப்பு மகளிர்க்கே வேண்டும் என்பதை விளக்குக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/179&oldid=881090" இலிருந்து மீள்விக்கப்பட்டது