பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 முதுகலைப் பட்டத்தோடு கல்வி முற்றுப்பெற்று விட்டதாக அவர் எண்ணினரல்லர். ஐ. சி. எஸ். (Indian Civil Service) என்னும் மேலே நாட்டுக் கல்வியில் காட்டஞ் செல்லவே இலண்டன் மாநகரம் சென்றடைந்தார். ஆனல் அவர் உடல்நிலை அக்கல்விக்கு இடங்தரவில்லை. ஆயினும் சட்டக் கல்வி பயில்வதெனத் துணிந்தார். அக்கல்வி பயிலுங்கால் அவருக்கு ஓய்வு மிகுதியாகக் கிடைத்தது; அவ் வோய்வுப் பொழுதைப் பயன்பெறுவகையாற் கழித்தல் வேண்டுமென எண்ணங்கொண்டிருந்தார். அ வ் வ ம ய ம் அங்கே மாநாடொன்று நடைபெற்றது. அம்மாநாட்டிற்குத் தமிழகத்திலிருந்து, ரைட் ஆனரபிள்' (Right Honourable) சீநிவாச சாத்திரியார் சென்றிருந்தார். அக்காலை அவருடைய தொடர்பு அழகப்பருக்குக் கிடைத்தது. அவர்தம் பரிந்துரை யால் இலண்டன் சார்ட்டர்டு பாங்கு' என்னும் நிறுவனத்தில் ஓய்வு நேரத்தில் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியது. எஞ்சிய நேரத்தில் வானுர்தி உய்க்கவும் கற்றுக்கொண்டார். இலண்டன் சென்ற அழகப்பர், ஒரு வானூர்தி வலவனாகவும் (Pilot) வழக்கறிஞராகவும் (Barrister) 1933இல் தாயகக் திரும்பினர். தொழில் முயற்சி தாயகம் மீண்ட அழகப்பர் வழிவழிவந்த தொழிலாகிய வாணிகத்தை மேற்கொண்டு, இடையருப் பேருக்கஞ் செலுத்தி, அல்லும் பகலும் அரும்பாடுபட்டு முயல்வாரா யினர். ஆயினும் ஊரை ஏய்த்துப் பிழைப்போரும், உதட்டில் நறவு பூசிய நட்பினரும், உடனிருந்தே ஊறுசெய்வோரும் சூழ்ந்திருந்தமையால் பெரும் பொருட்கேடு விளைவதாயிற்று. தொழிலில் இழப்பு நேர்ந்ததை அறிந்த அருமை நண்பர்கள், அற்ற குளத்துக் கொக்கே போல அகல்வாராயினர். அ.தும்' அவருக்கு மாந்தர் மனத்தியல்பை எடைபோட்டுப் பார்க்க உதவியது. ஆதலின், பொருளிழப்பு அவர்க்குத் தளர்ச்சியைக் கொடுத்திலது. மடுத்தவாயெல்லாம் பகடன்னன் உற்ற இடுக்கண், செயலிழந்து, வலுவிழந்து, பிறக்கிட்டோடி விடுமன்ருே ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/182&oldid=881098" இலிருந்து மீள்விக்கப்பட்டது