பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 பல்கலைக்கழகமும் அண்ணுமலைப் பல்கலைக்கழகமும் டாக்டர்’ பட்டங் தந்து சிறப்பித்தன. இந்தியப் பேரரசு பத்மபூஷண்' என்னும் விருது சூட்டிப் பெருமை செய்தது. செட்டிகாட் டரசராகிய அண்ணுமலைச் செட்டியாரவர்கள் அழகப்பரின் வண்மைக் குணத்தைப்போற்றி, வள்ளல் என்னும் பட்டப் பெயரைச் சூட்டிப் பாராட்டினர். அன்று முதல் அழகப்பச் செட்டியார், வள்ளல் அழகப்பர் என்றே அழைக்கப்பட்டார். சிறப்பியல்புகள் அஃறிணைப் பொருள்களிடத்தும் இரக்கங் காட்டும் அருளுள்ளம் படைத்தவர் அழகப்பர். கல்லூரிகளையடுத்து, அழகிய செடி கொடிகளையும் பூங்காக்களையும் ஏற்படுத்தினர். ஒரு சமயம் வீசிய புயலினல் மரங்கள், செடிகள், கொடிகள் சாய்ந்தும் சிதைந்தும் பாழாயின. அக் கோலத்தைக் கண்ட வள்ளலின் விழிகள் கசிந்து நீர்மல்கின. பொருளை யீட்டிப் பெருக்குவதிலே வல்லவர். ஈட்டிய பொருளை வகுப்பதிலே நல்லவர். அச்சத்தைக் கழிப்பதில் ஆற்றல் மிக்கவர். சான்ருேர்தம் உறவைக் கூட்டுவதிலே தகுதி வாய்ந்தவர். உரம், அவருள்ளத்தில் வித்திய வித்து உழைப்பு, அதற்குப் பாய்ச்சிய நீர், அவ்வித்தில் முளைத்தெழுந்த நன்மரமே அவர் பெற்ற செல்வம். அம்மரங் தந்தசெழுங்கனியே அவர் கொண்ட கொடைப் பண்பு. ஆங்கிலத்திலும் தமிழிலும் நகைச் சுவை கனியக் கனியப் பேசும் நாவன்மை, அவர்க்கு இயல்பாக வாய்த்த சிறப்பாகும். செய்ந்நன்றி மறவாச் செம்மல். சிந்தனை, கலங்காவூக்கம், விரைந்த செயல் முதலிய நற்பண்பு களுக்கு நிலைக்களன். நிலையாமையுணர்ந்த நெஞ்சினர். புகழுடம்பு "மன்னவுலகத்து மன்னியது புரிந்த அழகப்பர். 5-4-1957இல் புகழுடம்பு பெற்ருர். மக்கள் உள்ளத்து ளெல்லாம் வாழ்பவரானர். செந்நாப்புலவர்தம் செந்தமிழ்ப் பாடல்களிலெல்லாம் அழியா நிலைபெற்ருர். அப்பெருமக ஞரின் மறைவைக் குறித்து, அவர்தம் ஈகைப்பண்பு தோன்றக் கவியரசு முடியரசன் அவர்கள் மனமுருகிப் பாடியபாடல் ஈண்டு நினைவுகூரத்தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/185&oldid=881102" இலிருந்து மீள்விக்கப்பட்டது