உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 6. சீருப்புராணம் கபு:காபுப் படலம் (கபு:காபு முகம்மது நபியைக் காணவேண்டும் என்னும் ஆர்வங் தாண்ட ஒரு சமயம் அவரை, வந்து கண்டு தன் வரலாற்றைக் கூறுகின்றன். மதின நகரில் மறைகள் வல்ல பண்டிதர் ஒருவர்க்கு மகனுகப் பிறந்தேன். என் பெற்ருேர்க்கு வேறு பிள்ளேயில்லாத காரணத்தால் அவர்கள் என்பாற் பேரன்பு கொண்டு, கபுகாபு என்னும் பெயரிட்டு வளர்த்துக் கல்வி கேள்விகளில் வல்லமை பெறப் பயிற்றுவித்தனர். ஒரு நாள் என் வீட்டில் இருந்த பேழைகளில் உள்ள நூல்களில் சிறந்ததை எடுக்க கினேந்து முயன்றபோது முத்திரையிட்ட பொற்செப்பொன்றைக் கண்டேன். அதனைப் பற்றித் தந்தையிடங் கேட்டேன். அதற்கு அவர், மாயமுங் கபடும் நிறைந்த மறையைக் காட்டித் தீன் என்னும் மதத்தைத் தோற்றுவிக்கும் தியன் ஒருவன் தோன்றுவான் என்று பெரியோர் ஆய்ந்து கண்டு, அவன் பெயர் முதலியனவற்றை எழுதிவைத்துள்ளனர்; அதனே நீ திண்டாதே என்று கூறினர். எனினும், நான் ஒருவரும் அறியாவண்ணம் ஒரு நாள் அதனே எடுத்துப் படித்தேன். அதனுள் முகம்மது என்ற பெயரும் சிறப்பும் எழுதியிருக்கக் கண்டேன். எவரும் அறியாவண்ணம் அக்கடுதாசியில் ஒளியொன்று தோன்றக் கண்டேன்' என்ருன்.) - நபிகளிடம் கபுகாபு தன் வரலாறுரைத்தல் எந்தையும் யாயும் பன்ன எளியற்றிய தவத்தால் வந்த சந்ததி யென்ன வேறு தனையரில் லாது நாளும் புந்தியி னுவகை கூரப் போற்றிகற் புராணங் தேர்ந்து நந்தலில் கபுகா பென்னு நாமமு கவின்றிட் டாரால். 1 பேதைமை யகற்றிப் புக்திப் பெருக்கெடுத் தொழுகல் செய்யும் வேதவா சகம்பு ராண காவிய விதிக ளியாவு மோதென வோது வித்தென் னுளத்தினுக் கியைந்த தாகப் போதரச் செய்து கின்ருர் பொருவிலா வண்ணத் தன்றே 2 கபு:காபு தன் விட்டில் நல்ல நூல் தேடும்பொழுது முத்திரையிட்ட செப்பொன்றைக் காணல் முன்னவ ரோதும் வேத மூன்றினுங் தெரிந்த நூல்கள் பன்னெறி ஞான நூல்க ளினையன பலவுங் தொக்க : மின்னவிர் பேழை நூற்றின் மேலுமுண் டருங்காப் பின்றி யென்னுளம் பொருந்து நூன்மற் றெவையவை தெருள்வன் மன்னே. 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/35&oldid=881182" இலிருந்து மீள்விக்கப்பட்டது