பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை இந்நூல் அரசியலார் 3 1-8-1966 இல் வெளியிட்ட புதிய பாட இயலின்படி பத்தாம் வ கு ப் பு மாணவர்களுக்காகத் தொகுக்கப் பெற்றதாகும். மாணவர்களுக்குத் தாய்மொழியில் ஆர்வம் ஊட்டத்தக்க வகையில் செய்யுட் பகுதிகளும் உரைநடைப் பகுதிகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அறிஞர் பெ ரு ம க் களி ன் கட்டுரைகள், கடிதம், உரையாடல், நாடகம், குடும்பக்கலை, நாட்டு நலத்திட்டம், விஞ் ஞானம், செய்யுட் பகுதிகளைச் சுவைபட அமைத்த உரையாக்கம் முதலிய பலதிறப்பட்ட எழுத்தோவியங்கள் இதில் அமைந்துள்ளன. நூலாசிரியர் வரலாறு, அருஞ்சொற்பொருள், விளுக்கள் முதலியன மாணவர்களுக்குப் பயன் தரும் முறையில் அமைக்கப் பெற்றுள்ளன. இந்நூலில் தங்கள் கவிதைகளையும், கட்டுரை களையும் சேர்த்துக்கொள்ள இசைவு தந்த பெரு மக்கள் யாவருக்கும் உளம் நிறைந்த நன்றியினை உரிமையாக்குகின்றேன். கல்வித் துறையில் ஈடுபட்ட பெருமக்கள் அனைவரும் இந்நூலினை ஆதரித்து இத்துறை யில் மேலும் மேலும் எனக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்தருள வேண்டுகிறேன். தொகுப்பாசிரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/5&oldid=881213" இலிருந்து மீள்விக்கப்பட்டது