பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 42. வேலொடு நின்ருன்-கள்வன். இடு-பொருள் தா என வேண் டுதல். கோலொடு நின்ருன் இரவு-ஒறுத்தல் தொழிலுடன் நிற்கும் அரசன் பொருள் வேண்டுதல். உவமையணி. 43. இடும்பை-துன்பம். படாஅ-இசை நிறை யளபெடை. சொற் பொருள் பின்வருநிலையணி. i. 44. விழையான்-விரும்பாதவனகி, இடும்பை இயல்பு என்பான். துன்பம் வருதல் இயல்பு என்று கருதுபவன். == 45. அதனுல்-அச்சொல்லால். சுட்டுச் சொல் செய்யுளில் முன் வந்தது. காத்து ஒம்பல்-(சோர்வு) நிகழாமல் போற்றிக் காக்க. ஒம்பல்உடன்பாட்டு வியங்கோள் வினைமுற்று. 46. உறவரினும் மிகுதியாக வரினும். துணிவாற்றி, துணிவுடன் இன்பம் பயக்கும் வினே-பயன்தரும் செயல்களே. 47. எனைத்திட்பம்-படை அரண், நட்பு முதலிய வலிமைகள். வினைத்திட்பம் வேண்டாரை-வினைத்திட்பத்தை விரும்பாத அமைச்சரை. உலகு வேண்டாது-உயர்ந்தோர் மதியார். - * 48. அரம்-அரத்தின் கூர்மை. மரம்-ஒரறிவுயிராகிய மரம். 50. விழைவது உம் விட்டேம் என்பார்-யாவரும் விரும்பும் உணவையும் விட்டோம் என்னும் துறவியர். விழைவது உம்-இன்னிசை யளபெடை. வினுக்கள் : 1. பிறவிப் பெருங்கடலை நீந்துபவரும் நீந்தாதவரும் யார் யார் ? 2. வான் சிறப்பு எவ்வாறு கூறப்பட்டுள்ளது ? 3. அறன் வலியுறுத்தல் பற்றிய வள்ளுவர் கருத்தைத் தொகுத்து 4. அன்புடைமை பற்றிய வள்ளுவர் கருத்தைத் தொகுத்து எழுதுக. 5. விருந்தோம்பலின் சிறப்பை வள்ளுவர் எங்ங்னம் கூறுகிருர் ? 6. செய்ந்நன்றி யறிதல் பற்றிய வள்ளுவர் கருத்துக்கள் யாவை ? 7. அடக்கமுடைமை பற்றிய வள்ளுவர் கருத்துக்கள் யாவை ? 8. ஒழுக்கமுடைமை பற்றிய வள்ளுவர் கருத்துக்கள் யாவை ? 9. அழுக்காருமை பற்றிய வள்ளுவர் கருத்துக்கள் யாவை ? 10. ஈகையைப் பற்றி வள்ளுவர் கூறுவனவற்றைத் தொகுத் தெழுதுக. 11. வாய்மை பற்றி வள்ளுவர் கூறுவனவற்றைத் தொகுத்தெழுதுக. 12. வெகுளாமை பற்றிய வள்ளுவர் கருத்துக்கள் யாவை ? 13. இன்ன செய்யாமை பற்றிய வள்ளுவர் கருத்துக்கள் யாவை ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/52&oldid=881219" இலிருந்து மீள்விக்கப்பட்டது