உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 ஈட்டல்-வியங்கோள் வினைமுற்று. இன்றி என்னும் வினையெச்சம் இன்று எனத்திரிந்து நின்றது. . 2. கடல் முகந்து-கடல்நீரை மொண்டுகொண்டு. தீம்பெயலை ஊழ்க்கும்-(உப்பை நீக்கி) நல்ல மழையைப் பெய்யும். எழிலி-மேகம். மடன்-மடமை. கோது-அறியாமை. ஏமம்-இன்பம், மாண்புறுத்தலும் ஏமம் படைத்து ஆக்கலும் பண்பறிந்தோர் சால்பாகும். எடுத்துக்கா டுவமையணி. -♔ வினுக்கள்: - 1. செல்வம் உண்மையாலும் இன்மையாலும் விளைவது யாது ? 2. அறிஞர் கடமைகள் யாவை ? இங்கு எடுத்துக் காட்டப்பட்ட உவமை யாது ? * 4 3. கடன் முகந்து- என்ற பாடலில் அமைந்த அணியாது ? 3. பழமொழி. ஒவ்வொரு பழமொழியை இறுதியில் கொண்ட நானுறு வெண்பாக் களை உடைய நூலாகையால் இது பழமொழி என்று வழங்கப்படுகிறது. ஆசிரியர் பாண்டிய நாட்டைச் சார்ந்த முன்றுறைக்கு அரசராக விளங்கிய முன்றுறையரையனுர். காலம் : கடைச்சங்க காலம் என்பர். பதினெண் tழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று அருஞ்சொற்பொருள் : 1. ஆற்றவும்-மிகுதியும். தமவே-அவருடைய நாடுகளேயாகும். ஆயினுல்-அங்ங்னமாயின். ஆற்று உணு-வழியிற் கொண்டு செல்லும் கட்டமுது. வேண்டுவது இல்-வேண்டியதில்லை. 'கற்ருர்க்கு ஆற்றுணு வேண்டுவதில் என்பது பழமொழி. 2. ஆற்ருர் எனினும்-அறத்தைச் செய்யாரெனினும், சிறந்தவற்ருல்சிறந்த நெறிகளால். கலை தாங்கி கைவது போலும் நுசுப்பிய்ை-மேகலை தாங்குவதால் இறுவது போலும் இடையினையுடைய பெண்ணே, மகடுஉ முன்னிலை. கேள்-சுற்றத்தார். கேள்-ஆகுபெயர். நல்லறம் செய்வது செய்யாது கேள்’ என்பது பழமொழி. 3. தமராய்-உறவினர்போல். மிக்கார் என்று-குணத்தில்ை மிக்கவ ரென்று. தேருர்-தெளிந்து நட்புச் செய்யார். கொக்கு ஆர் வளவயல் ஊர-கொக்கு மிகுந்த வளநிறைந்த ஊரையுடையவனே;ஆடுஉ முன்னிலை அக்காரம்-சர்க்கரை, ஆல்-அசை நிலை- தினலாமோ அக்காரம் சேர்ந்த மனல் என்பது பழமொழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/54&oldid=881223" இலிருந்து மீள்விக்கப்பட்டது