பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 2. வருணனை திரை-அகல. குடைதல் - துளைத்தல், கனைத்தல் - முழங்குதல். இப்பாடலில் உலக வழக்குச் சொற்கள் பயின்று வந்துள்ளன. 2. இரவும் பகலும் என்ற பகுதி. கவிஞர் முடியரசல்ை இயற்றப் பட்ட பூங்கொடி என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது இவர்தம் பெற்ருேள்: சுப்புராயலு, சீதாலட்சுமி அம்மையார். மதுரை மாவட்டத் திலுள்ள பெரியகுளம் என்னும் ஊரிற் பிறந்தவர். காரைக்குடி மீ. சு. உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகின்ருர், 7-10-1920இல் பிறந்தவர். அருஞ்சொற்பொருள் : பழுதை-கயிறு, பட அரவு-படத்தினையுடைய பாம்பு. இருள் ஆட்சிஇருளின் ஆட்சி. எதிர்மறைப் பொருளாய்-மக்கட்கு எதிரிடையாக, கொடும்பர்-கொடியர். உயிர்...ஒடுதல்-உயிரெழுத்து முதன் மொழி வரும்பொழுது நிலைமொழியிலுள்ள குற்றுகரம் ஒடும். 3. சீட்டுக் கவி கவிதை வடிவிலே எழுதப்படும் கடிதம். மதுரைச் சொக்கநாதர் திருமுன்பு யாழ்வாசித்துக் கொண்டிருந்த பாணபத்திரர், தம் வறிய நிலையை இறைவனிடம் முறையிட அதனேக் கண்ணுற்ற இறைவன், பத்திரருடைய வறுமையைப் போக்கவேண்டிச் சேர மன்னனுக்கு எழுதி யனுப்பியது இது. தனிப்பாடற்றிரட்டில் உள்ளது இப்பாடல். அருஞ்சொற்பொருள் : மலி-பொருந்திய, புரிசை-மதில், கூடல்-மதுரை.கில்-பொழில். (அன்னம்) நிறைந்த சோலை. ஆலவாயில் - திருவாலவாய் என்னுங் கோவில். கொண் மூப்படி என - மேகம் போல. ஒருமை - மன ஒருமை. உரிமையின் - தகுதிக்கேற்ப. குரு-நிறம். செரு மா- ேபார் யா ஜன. உகைக்கும்-செலுத்தும். பண்பால் - பண்ணின் பகுப்பு. தன்போல் - உன்னைப்போல. தன்பால்-உன்னிடம், மாண் பொருள்-மிக்கபொருள். 4. இரட்டுற மொழிதல் எழுமலச் சிலேடை வெண்பா 轟 உடுமலைப்பேட்டையைச் சார்ந்த எழுமலை வேங்கடாசலப்பெருமாள் மீது பாடப்பட்ட சிலேடை வெண்பா. சிலேடை-இருபொருள் அமையப் பாடுவது. இதன் ஆசிரியர் கொங்கு நாட்டைச் சார்ந்த சிற்றுாரினர். அணிமைக் காலத்தவர். பலபொருள்படப் பாடல் இயற்றுவதிலே வல்லவர் என்பது இவர்தம் பாடல்களால் அறியக் கிடக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/70&oldid=881260" இலிருந்து மீள்விக்கப்பட்டது